முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன முதியோர் காப்பகத்திற்கு தீவைப்பு: 11 பேர் பரிதாப பலி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், ஜூலை. 28 - 200 யுவாங் பணத்திற்காக சீனாவின் முதியோர் காப்பகத்தில் வசித்த ஒருவர் அந்த காப்பகத்திற்கு தீ வைத்ததில் அவர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் ஹெய்லாங் ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹெய்லூன் நகரில் ஆதரவற்ற முதியோர்களுக்கான மருத்துவ காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இதன் உள்நோயாளிகளுக்கான கட்டிடத்தில் வாங்குய் என்பவர் வைத்த தீயால் அக்கட்டிடம் முற்றிலுமாக நாசமானது. இதில் சிக்கி வாங்குய் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இரண்டு பேர் காயமடைந்தனர். 

மூளையில் இருந்த ரத்தக்கட்டிக்காக வாங்கும் இந்த மருத்துவ காப்பகத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரிடம் இருந்து 200 யுவாங் காணாமல் போய் விட்டது. சக நோயாளிகளில் ஒருவர்தான் அதை திருடி விட்டதாக சந்தேகமுற்ற அவரை அங்கிருந்த அனைவரும் சமாதானப்படுத்தியும் ஆத்திரத்தில் அவர் அந்த கட்டிடத்துக்கு தீ வைத்து விட்டார். இறந்தவர்கள் அனைவரும் 45 வயது முதல் 57 வயதுடையவர்கள். ஆதரவற்ற முதியோர்களுக்காக இந்த மருத்துவ காப்பகம் 2005 ல் கட்டப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்