முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வம்சாவளி அமெரிக்கருக்கு நீதிபதி பதவி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூலை. 28 - அமெரிக்காவின் கலிபோர்னியா வடக்கு மாவட்ட நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த வின்ஸ் கிரிதாரி சாப்ரியாவை அதிபர் ஒபாமா பரிந்துரைத்துள்ளார். அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்த பின்பு அவர் அப்பதவியை ஏற்பார். சாப்ரியா இப்போது சான்பிரான்சிஸ்கோ நகர அரசு வழக்கறிஞர்கள் பிரிவின் துணை தலைவராக உள்ளார். சாப்ரியா உட்பட 5 பேரை நீதிபதி பதவிக்கு ஒபாமா பரிந்துரைத்துள்ளார். 

நீதியை நிலைநாட்டும் உறுதியுடனும் அமெரிக்க மக்களின் ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் இவர்கள் நீதிபதிகளாக பணியாற்றுவார்கள் என்றும் ஒபாமா கூறியுள்ளார். கலிபோர்னியா மாகாணத்தில் நீதிபதியாக பதவியேற்கும் முதல் தெற்காசிய வம்சாவளியை சேர்ந்தவர் என்ற பெருமையை சாப்ரியா பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்