முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லீனா - சுகாஷிடம் மத்திய அமலாக்கப் பிரிவினர் விசாரணை

சனிக்கிழமை, 27 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 28 - வங்கிக் கடன் மோசடி வழக்கில் கைதான நடிகை லீனா மரியா பால், அவரது காதலன் சுகாஷிடம் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கனரா வங்கியின் அம்பத்தூர் கிளையில் ரூ.19.2 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் நடிகை லீனா, சுகாஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் சுகாஷிடம் விசாரணை மேற்கொண்டதில், கடனாகப் பெற்ற தொகையில் ரூ.12 கோடியை செலவு செய்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் ரூ.9 கோடிக்கு வைர ஆபரணங்கள், 9 சொகுசு கார்களை வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ரூ.3 கோடியை மும்பையில் உள்ள அவரது நண்பர் குணால் என்பவரிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும் சுகாஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மீதமுள்ள ரூ.7 கோடி மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வழக்கு குறித்து மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சுகாஷ் மற்றும் லீனாவிடம் விரைவில் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். வங்கிக் கிளை மேலாளரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது. வங்கிகள் மற்றும் தனியாரிடம் அவர்கள் செய்த மோசடிகள் குறித்த தகவல்களை மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் மாநகரப் போலீஸார் விரைவில் அளிக்க உள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago