முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி விசா தொடர்பாக எம்பிக்கள் எழுதிய கடிதம் உண்மை

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்கடன்,ஜூலை.29 ​- குஜராத் முதல்வரும், பாரதீய ஜனதாகட்சியின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவருமான நரேந்திரமோடிக்கு விசா கொடுக்க கூடாது என்று கோரி இந்திய எம்பிக்கள் அமெரிக்கஅதிபர் ஒபாமாவுக்கு எழுதிய கடிதங்கள் மோசடியானவை என்று கூறப்பட்டு வரும் நிலையில், ஒபாமாவுக்கு இந்திய எம்பிக்கள் எழுதிய கடிதம் உண்மையானவை என்றும் அதிகாரபூர்வமானவை என்றும் அமெரிக்க தடயவியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

   குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு அமெரிக்க அரசு விசா கொடுக்க மறுத்து வருகிறது. குஜராத்தில் நடந்த இன கலவரத்தை காரணம் காட்டி அவருக்கு விசா கொடுக்க அந்நாட்டு அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இருந்தாலும் கூட விசா கேட்டு மோடி விண்ணப்பித்தால் அதை  பரிசீலிப்போம் என்று சமீபத்தில் அமெரிக்கா தெரிவித்தது. இந்த நிலையில், மோடிக்கு விசா கொடுக்க கூடாது என்று கோரி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இந்திய எம்பிக்கள் கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவரான சீத்தாராம்யெச்சூரி உள்பட பல எம்பிக்கள் மறுத்தனர். இந்த கடிதம் மோசடியானது. வெட்டி ஒட்டப்பட்டது என்று பல எம்பிக்கள் கூறினார்கள். இன்னும் சில எம்பிக்களோ நாங்கள் கையெழுத்து போடவே இல்லை என்றும் கூறியிருந்தார்கள். திமுக எம்பிக்கள் கூட இதில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு கையெழுத்திட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருணாநிதியும் அறிவித்திருந்தார். இப்படி மோடி தொடர்பான கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ஒபாமாவுக்கு எழுதப்பட்ட கடிதம் உண்மையானவை  தான். அது அதிகாரபூர்வமானதுதான் என்று அமெரிக்க தடயவியல் ஆவண ஆய்வாளர்தெரிவித்துள்ளார்.

  இது குறித்து கலிபோர்னியாவை சேர்ந்த தடயவியல் ஆய்வாளர் கூறுகையில் இந்திய எம்பிக்களின் கையெழுத்துக்கள் உண்மையானது மட்டுமன்றி அது அதிகாரபூர்வமானதுதான் என்று தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் அவர்கள் கூறியதுபோல வெட்டி ஒட்டப்பட்டது அல்ல. என்னைபொறுத்தவரை அவர்கள் மூன்று பக்க கடிதம் எழுதி இருக்கிறார்கள். அவர்களின் கையெழுத்துக்கள் உண்மையானது என்று உறுதி பட தெரிவித்துள்ளார். இதையடுத்து மோடியின் விசா விவகாரம் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்