முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்தில் துணைஜனாதிபதி ஹமீத் அன்சாரி

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      உலகம்
Image Unavailable

டாக்கா,மே.6 - இந்திய துணைஜனாதிபதி ஹமீத் அன்சாரி நேற்று வங்கதேசத்திற்கு சென்றார்.

கடந்தாண்டு ஜனவரி மாதம் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்த தினத்தை இந்தியாவும் வங்கதேசமும் சேர்ந்து கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதனையொட்டி வங்கதேசத்தில் ரவீந்திரநாத் 150-வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஹமீத் அன்சாரி நேற்று வங்கதேசத்திற்கு சென்றார். டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய ஹமீத் அன்சாரியை அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் திபுமோனி வரவேற்றார். ஹமீத் அன்சாரியுடன் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பிரிநீத் கவுர், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓ.பி.மாத்தூர், மொய்நுல் ஹாசன் ஆகியோரும் சென்றுள்ளனர். கடந்தாண்டு பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவுக்கு வந்து சென்ற பின்னர் வங்கதேசத்திற்கு உயர்மட்ட அளவில் ஒரு தலைவர் அங்கு சென்றிருப்பது முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்