சஹாரா குழுமம் மீது வழக்குத் தொடர மனு

SupremeCourt 1

 

புதுடெல்லி, மே 7 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான ஊழல் விசாரணையில் தலையிடுவதாக கூறி சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரடோராய் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில்  அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது. 

டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அமலாக்கப்பிரிவு விசாரணை அதிகாரி ராஜேஸ்வர் சிங் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலோடு தொடர்புடைய ரூ. 150 கோடியை பண பரிமாற்றம் செய்தது தொடர்பாக தங்கள் முன் ஆஜராகும்படி சுப்ரட்டோ ராய்க்கு தாங்கள் நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஆனால் சுப்ரட்டோ ராய் ஆஜராகவில்லை என்றும் எனவே இது கோர்ட்டு அவமதிப்பு குற்றமாகும் என்றும் அந்த மனுவில் குறப்பட்டுள்ளது. இந்த மனுவில் சஹாரா சமாய் என்ற பத்திரிகையும், பத்திரிகையாளர்கள் சிலரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன. கோர்ட்டு அவமதிப்பு குற்றம் புரிந்த சஹாரா குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் சுப்ரட்டோ ராய் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் விசாரணை நடத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ