முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொச்சி 17 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது

சனிக்கிழமை, 7 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

கொச்சி, மே. 7 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் கொச்சியில் நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 17 ரன் வித்தியாசத் தில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி வீழ்த்தி இந்தத் தொடரில் முன் னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் கொச்சி அணி தரப்பில், கேப்டன் ஜெயவர்த்த னே அபாரமாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்து அணி கெளரவ மான ஸ்கோரை எடுக்க உதவினார். தவிர, கிளிங்கர், மற்றும் ஹாட்கே ஆகியோர் அவருக்குப் பக்கபலமாக ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, முன்னணி பந்து வீச்சாளர்களான வினய் குமார் மற்றும் கோம்ஸ் இருவரும் நன்கு பந்து வீசி 4 முக்கிய விக்கெ ட்டைக் கைப்பற்றினர். ஆர். பி. சிங் அவர்களுக்கு ஆதரவாக பந்து வீசினார். 

ஐ.பி.எல். டி - 20 தொடரில் கொச்சியில் உள்ள நேரு அரங்கத்தில் 45 - வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் கேப்டன் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கேப்டன் ஜெயவர்த்தனே தலைமையிலான கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியும் மோதின. 

முன்னதாக இந்தப் போட்டியில் பூவா தலையாவில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது. கொச்சி அணி தரப்பி ல், பிரண்டன் மெக்குல்லம் மற்றும் கிளிங்கர் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய கொச்சி அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 156 ரன்னை எடு த்தது. அந்த அணி சார்பில், ஒரு வீரர் அரை சதமும், 2 வீரர்கள் கால் சத மும் அடித்தனர். 

கேப்டன் ஜெயவர்த்தனே அதிகபட்சமாக, 41 பந்தில் 55 ரன்னை எடுத் தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் காலிஸ் மற்றும் லட்டா கூட்டணியின் பீல்டிங்கால் ரன் அவுட்டாகி வெறியேறினார். 

அடுத்தபடியாக, ஹாட்கே 19 பந்தில் 35 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். தவிர, கிளிங்கர் 26 பந்தில் 29 ரன்னையும், கீப்பர் பார்த்திவ் படேல் 16 பந்தில் 21 ரன்னையும் எடுத்தனர். 

கொல்கத்தா அணி சார்பில் வேகப் பந்து வீச்சாளர் உனாட்கட் 25 ரன் னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, யூசுப் பதான் மற்றும் பாட்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

கொல்கத்தா அணி 157 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை கொச்சி அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்னை எடுத்தது. 

இதனால் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி கொச்சியில் நடந்த இந்த லீக் ஆட்டத்தில், 17 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் இருவரும் நன்கு பேட்டிங் செ ய்து அணிக்கு நல்ல துவக்கத்தை அளித்தனர். ஆனால் பின்பு வந்த வீர ர்கள் இதனை நன்கு பயன்படுத்தத் தவறியதால் அந்த அணி தோல்வி யை தழுவியது. 

கொல்கத்தா அணி தரப்பில், மார்கன் அதிகபட்சமகாக 51 பந்தில் 65 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். காலி ஸ் 41 பந்தில் 45 ரன்னை எடுத்தார். தவிர, யூசுப் பதான் 13 பந்தில் 17 ரன்னை எடுத்தார். 

கொச்சி அணி சார்பில், கோம்ஸ் 14 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். வினய் குமார் 28 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தா ர். தவிர, ஆர்.பி.சிங் 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஹாட்கே தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago