2ஜீ வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட வேண்டும்-சுப்ரமணியசுவாமி

Subramanian-Swamy

சேலம் மே.- 8 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் உள் துறை அமைச்சர் சிதம்பரம் கைது செய்ய மனு தாக்கல் செய்ய உள்ளதாக சேலத்தில் அகில இந்திய  ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசுவாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சேலம் தெற்கு அம்மாபேட்டை ஸ்ரீ குருதேவ் குருகுலம் விசுவ ஹிந்து பரிசத்தின் இளைஞர் அமைப்பான பஜ்ரங்தள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியசுவாமி, விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலக செயல் தலைவர் ஸ்ரீ வேதாந்தம் ஜீ  சேலம் நாமக்கல், தருமபுரி மாவட்ட பொருளாளர் ஆத்மானந்தா, ஆகியோர் வந்திருந்தனர். மேலும் இதில் சேலம் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் செயலாளர் கிருஷ்ணராஜ், ராஜராஜேஸ்வரி மகிளா சமாஜ் தலைவர் சிவாம்பா பார்வதி, பஜ்ரங்தள் மாநில இளைஞரணி செயலாளர் சிவலிங்கம், சேலம் மாவட்ட தலைவர் வக்கீல் சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் பஜ்ரங்தள் இளைஞர்கள் கராத்தே, சிலம்பம், கயிறு ஏறுதல், கல் எறிதல், கயிற்றில் தொங்கிகொண்டே செல்லுதல், நெருப்பு வளையத்திற்குள் குதித்தல் உள்ளிட்ட பயிற்சிகளை செய்து காட்டினர்.
இதனை தொடர்ந்து ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று மனு கொடுக்க உள்ளேன். ஸ்பெக்ட்ரம் அலை ஒதுக்கீடு 2001 ல்  நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு  10 மடங்கு விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில் 2008 ல்  அதே தொகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது இதில் 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சிஐடி ரிப்போட் தெரிவிக்கின்றது.
இந்த அலைகற்றை ஒதுக்கீடு விசயத்தில் ராஜா தனியாக முடிவெடுக்க முடியாது. 2003 ல் டெலிகாம் மினிஸ்டர் தனியாக முடிவெடுக்கூடாது என்றும் நிதியமைச்சருடன் சேர்ந்து முடிவெடுக்கவேண்டும் என்று கேபினேட்டில் பாஸ் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜாவும் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரமும் 4 முறை பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்துள்ளனர். அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது. இதை பிரதமரும் ஒப்புக்கொண்டுள்ளார். ஊழலில் சிதம்பரத்திற்கும் பங்கு உண்டு. சிதம்பரம் அவரது மகன் கார்த்தி ஆகியோர் கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நிலங்களை வாங்கியுள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ராஜா குற்றவாளி என்றால் சிதம்பரமும் குற்றவாளி இதை கோர்ட்டில் பதிவு செய்வேன். இவர் நிதியமைச்சராக இருந்தபோது தான் இது நடந்துள்ளது. சிதம்பரம் தானே ராஜினாமா செய்யவேண்டும். காங்கிரசுக்கு இதில் ஈடுபாடு உள்ளது காங்கிரசின் மிகப்பெரிய தலைவருக்கும் இதில் தொடர்புள்ளது.
சிவராஜ் பாட்டீல் மினிஸ்டராக இருந்தபோது துபாய் எட்டிசிலாட் நிறுவனத்திற்கும் நார்வே டெலிநார் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் எட்டிலாட் நிறுவனத்தின் பால்வா தாவுத் இப்ராஹிமின் கைக்கூலி ஆவார். டெலிநார் நிறுவனம் சைனா எக்யூப்மெண்டை பயன்படுத்துவார்கள் இதனால் ஜீரோ வார்சர் பயன்படுத்தி இந்தியாவின் ஒட்டு மொத்த கம்யூட்டர்களை செயல்படாதவாறு செய்ய முடியும். தற்போது இந்த நிறுவனங்களுக்கு வழங்கியிருப்பது இந்தியாவுக்கு தேச துரோகம் ஆகும் இதனால் சிதம்பரம் தேச துரோகம் செய்துள்ளார் இதற்காக தனியாக ஒரு மனு போடுவேன்.
தி.மு.க தலைவர் கருணாநிதி முன்னர் ஆ.ராஜா அப்பாவி என்றும் தலித் இனத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது பொய் வழக்கு போடுவதாகவும் தெரிவித்தார். இப்போது தனது மகள் கனிமொழியை காப்பாற்றுவதற்காக ஆ.ராஜா வை குற்றவாளி என்று கூறி வருகிறார்.
கனிமொழி தனக்கு தெரியாது என்று மறுக்க முடியாது அவர் பல்வேறு இடங்களில் கையெழுத்து போட்டுள்ளார் இது மிகப்பெரிய குற்றமாகும். கருணாநிதி அவரது மனைவி, துணைவி, மகள் அனைவரையும் குற்றவாளி லிஸ்டில் சேர்க்கவேண்டும். எல்லோரும் ஒரே நேரத்தில் ஆஜரானால் அங்கு இடம் பற்றாக்குறை ஏற்படும் நெரிசல் ஏற்படும் ஏற்கனவே நெரிசலில் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். அதனால் ஒன்றன் பின் ஒன்றாக இது நடக்கும்.
தி.மு.க  காங்கிரஸ் உறவை யாராலும் பிரிக்க முடியாது ஏனென்றால் இரு தரப்பினரும் ஊழல் குற்றவாளிகள். கருணாநிதி இதிலிருந்து தப்ப முடியாது. 214 கோடி வட்டியில்லா கடன் ஒரு சினி கம்பெனி கொடுத்துள்ளது. இதை யாரும் நம்ப முடியாது. நாட்டின் எதிர்காலமே இதில்தான் உள்ளது. இதை விரட்டாவிட்டால் நாடே குட்டிச்சுவர் ஆகிவிடும். குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராடுவேன் இவ்வாறு பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ