முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காண்டுவின் இறுதிச் சடங்குகள் மே 10ம் தேதி நடைபெறுகிறது

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      இந்தியா
Image Unavailable

இடாநகர், மே - 8 - ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டுவின் இறுதிச் சடங்குகள் வருகிற 10 ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.  அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் பலியானார். அவரது உடல் 5 நாள் தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்டது. அவரது உடல் இடாநகர் கொண்டுவரப்பட்டு அங்கு அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். அவரது இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான தவாங்கில் வருகிற 11 ம் தேதி நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் புத்தமத சம்பிரதாயப்படி அவரது உடலை வருகிற 10 ம் தேதியே தகனம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 10 ம் தேதி டோர்ஜி காண்டுவின் உடல் புத்தமத முறைப்படி தகனம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை அருணாச்சல பிரதேச முதல்வர் ஜர்போம் காம்ளின் அலுவலக செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி தெரிவித்தார். புத்தமதத்தின் மோன்பா இன பாரம்பரிய வழக்கப்படி காண்டுவின் உடல் அவரது சொந்த மாநிலமான கியான்காரில் தகனம் செய்யப்படும். அதுவரை அவரது உடலுக்கு புத்தமதத்தைச் சேர்ந்த லாமாக்கள் விசேஷ பூஜைகளை செய்வார்கள். காண்டுவின் அன்மா சாந்தியடைய இந்த பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
ஹெலிகாப்டரில் சென்ற காண்டுவும் அவருடன் சென்ற மேலும் 4 பேரும் கடந்த ஏப்ரல் 30 ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தனர். அவர்களது உடல்கள் லுகுதாங் என்ற இடத்திற்கு அருகே கடந்த மே 4 ம் தேதி மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago