முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெய்லின் அதிரடி ஆட்டத்தால் அதிர்ச்சியில் உறைந்து விட்டோம்-கில்கிறிஸ்ட் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      விளையாட்டு
Image Unavailable

பெங்களூர், மே. - 8 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் பெங்களூரில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியின் துவக்க வீரரான கெய்ல் அதிரடி யாக ஆடி சதம் அடித்தது கண்டு நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டோம் என்று பஞ்சாப் அணியின் கேப்டனான ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்தார். ஐ.பி.எல். டி - 20 போட்டியின் 47 -வது லீக் ஆட்டம் பெங்களூரில் உள்ள சின்னசாமி அரங்கத்தில் நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் சேலஞ்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் சதமும், இரண்டு வீரர்கள் கா ல் சதமும் அடித்தனர்.
பின்பு சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 20 ஓவரில் 9 விக்கெ ட் இழப்புக்கு 120 ரன்னை எடுத்தது. இதனால் பெங்களூர் அணி இந்த லீக் போட்டியில் 85 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் கெய்லின் அதிரடி சத த்தால் பெங்களூர் அணி அசத்தலான வெற்றியைப் பெற்றது. இது குறி த்து கில்கிறிஸ்டிடம் கேட்ட போது, கெய்லின் சதம் குறிப்பிடத்தக்க தாகும் என்றார்.
இந்தப் போட்டி முடிந்ததும் பெங்களூரில் நிருபர்களைச் சந்தித்த ஆட ம் கில்கிறிஸ்ட் அவர்களுக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது -
இந்த லீக்கில் கெய்லின் அதிரடி சதம் பாராட்டத்தக்கதாகும். அவர் முதலில் 10 பந்துகளில் ரன் எடுக்கவில்லை. அதன் பிறகு, அவர் அபார மான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார். இதனால் ஆட்டம் எங்களது கட்டுப் பாட்டை இழந்தது. அவரது அதிரடியை காண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்து விட்டோம்.
மே.இ.தீவு வீரரான கெய்ல் 49 பந்தில் 107 ரன்னை எடுத்தார். இதில் 10 பவுண்டரியும், 9 சிக்சரும் அடக்கம். கெய்லின் ஆட்டத்தைப் பார்த்த போது, எப்படியும் 230 ரன்னை சேஸ் செய்ய வேண்டி இருக்கும் என்று நான் நினைத்தேன்.
சின்னசாமி அரங்க மைதானம் சிறிய மைதானமாக இருந்தது. கெய்ல் ஆட்டத்தில் சில தவறான ஷாட்டுகளையும் அடித்தார். அவரது சதத்த ால் அந்த அணி 230 முதல் 240 ரன்னை எடுக்கும் என்று நாங்கள் எதிர் பார்த்தோம்.
பின்பு பெளலிங்கின் போது கெய்ல் மீண்டும் தனது முத்திரையை பதி த்தார். அவர் நன்கு பந்து வீசி 3 விக்கெட்டை எடுத்தார். இந்த ஆட்டத் தில் பெங்களூர் அணியின் வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
அடுத்த இரண்டு நாட்களில் நாங்கள் மீண்டும் பெங்களூர் அணியை சந்திக்க இருக்கிறோம். அப்போது எங்களது வீரர்கள் ஒருங்கிணைந்து ஆடி, அந்த அணிக்கு பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறி னார்.   
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனான டேனியல் வெ ட்டோரியும் மே.இ.தீவு வீரர் கெய்லின் ஆல்ரவுண்டிங் திறமைக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்த ஆட்டம் 20 -க்கு 20 போட்டிக்கு ஏற்றவாறு இருந்தது. கெய்ல் இதில் அற்புதமாக ஆடி சதம் அடித்தார். இந்த விக்கெட் பேட்டிங்கிற் கு ஏற்றவாறு இல்லை என்றார் அவர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்