முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிக்கையை ரத்து செய்ய வழக்கு

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.17 - இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவது குறித்து வெளியிட்டுள்ள அறிவிக்கையை ரத்து செய்ய கோரிய வழக்கிற்கு 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மத்திய, மாநில தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் எஸ்.கருப்பையா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
இடஒதுக்கீடு
கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன் படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பதவிக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவது கட்டாயம் என்று தேசிய கல்வி கவுன்சில் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
இதற்கான அறிவிக்கையை 23-8-2010 அன்று தேசிய கல்வி கவுன்சில் வெளியிட்டது. அதில், ஆசிரியர் தகுதி தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம்பெறவேண்டும் என்பது அவசியமானது. அதேநேரம் அந்தந்த மாநில அரசுகள் ஏற்கனவே வழங்கும் இடஒதுக்கீடு அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு சலுகை மதிப்பெண்களை வழங்கலாம் என்று கூறியுள்ளது.
இதனடிப்படையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் தேர்ச்சி மதிப்பெண்ணை ஆந்திர மாநில அரசு 40 சதவீதம் என்றும் ஒரிசா, மணிப்பூர் மாநில அரசுகள் 50 சதவீதம் என்றும் உத்தரபிரதேச மாநில அரசு 55 சதவீதம் என்றும் நிர்ணயம் செய்துள்ளது.
சமூகநீதி
ஆனால், சமூகநீதிக்கு முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகத்தில் மட்டும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இந்த சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை. இந்த சலுகை மதிப்பெண் வழங்கும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை அரசு எடுக்கவில்லை.
ஏற்கனவே 2012-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு நடந்து முடிந்து விட்டது. இந்த தேர்வில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வழிக்காட்டுதலை தமிழக அரசு பின்பற்றவில்லை.
இந்த நிலையில், 2013-ம் ஆண்டுக்காக ஆசிரியர் தகுதி தேர்வு நடந்துவது குறித்து 22-5-2013 அன்று தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டது. இந்த அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பே, அதாவது 16-4-2013 அன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கவேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தேன்.
2 வாரம் நோட்டீசு
இதுவரை எந்த நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை. எனவே ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவது குறித்து 22-5-2013 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையை சட்டவிரோதமானது, தன்னிச்சையானது என்று அறிவிக்கவேண்டும். அந்த அறிவிக்கையை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி, தமிழக கல்வித்துறை முதன்மை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago