முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரம்யாவுக்கு ஆதரவாக சிரஞ்சீவி பிரச்சாரம்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2013      அரசியல்
Image Unavailable

 

பெங்களூர், ஆக.20 - கர்நாடகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில், நடிகை ரம்யாவை ஆதரித்து சிரஞ்சீவி, அம்பரீஷ் ஆகியோர் பிரச்சாரம் செய்கிறார்கள். கர்நாடக மாநிலம், மாண்டியா எம். பி. தொகுதியிலும், பெங்களூர் ரூரல் தொகுதியிலும் இம்மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 24-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக  நடிகை ரம்யாவும், ஜனதாதளம் சார்பில் புட்டராஜூம் போட்டியிடுகிறார்கள்.

இந்தத் தொகுதி ஜனதா தளம் வசமிருந்தது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து இத்தொகுதியைக் கைப்பற்ற காங்கிரஸ் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நடிகை ரம்யாவுக்கு ஆதரவாக முதல் மந்திரி சித்த ராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் மற்றும் நடிகர் அம்பரீஷ் மற்றும்  ரயில்வே மந்திரி மல்லிகார்ஜூன கார்கேயும் ஆதரவு திரட்டினர். 

மத்திய மந்ஜிரி சிரஞ்சீவி இறுதிக் கட்ட பிரச்சாரம் செய்து வருகிறார். 

பெங்களூர் நீரல் தொகுதியில் ஜனதாதளம் சார்பில் முன்னாள் முதல் மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியும், காங்கிரஸ் சார்பில் சுரேஷ் என்பவரும் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்தாமல் பாஜக புறக்கணிக்கிறது. ஜனதாதளம் சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரச்சாரம் செய்து வருகிறார். மூத்த காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணா, இந்தத் தேர்தலில் பிரச்சாரம் செய்யவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்