முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாக்குதலின் விளைவுகளை சந்திக்க நேரிடும்: இந்தியா

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 21 - இந்தியா கட்டுப்பாட்டுடன் இருப்பதை தங்களுக்கு சாதகமாக பாகிஸ்தான் நினைத்தால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. மாநிலங்களவையில் திங்கள்கிழமை பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி இவ்வாறு தெரிவித்தார். அவர் பேசியதாவது, 

ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 5 வீரர்களை சுட்டுக் கொன்ற பாகிஸ்தானின் செயல் கண்டிக்கத்தக்கது. எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு மதிப்பளித்து இந்திய ராணுவம் செயல்பட்டு வருகிறது. நமது கட்டுப்பாட்டை தங்களுக்கு சாதகமாக பாகிஸ்தான் கருதுமானால் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கத் தயங்காது. இந்தியா கட்டுப்பாடுடன் இருப்பதை சாதகமாக்கிக் கொள்ள நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும்.

பாகிஸ்தானின் அத்துமீறல் இரு நாட்டு உறவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, எல்லைக் கோட்டில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கையில் எதிர்விளைவை ஏற்படுத்தக் கூடும் என அவர் மேலும் தெரிவித்தார். கடந்த சில நாள்களாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் பல முறை அத்துமீறி நடந்து கொண்டுள்ள நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரின் இந்த எச்சரிக்கைப் பேச்சு அமைந்துள்ளது.

ஆகஸ்ட் 6 ம் தேதி நடந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் ராணுவமே காரணம் என திட்டவட்டமாகத் தெரியவந்துள்ளது. இதில் பாகிஸ்தான் காஷ்மீர் பிரிவினைவாத குழு இந்திய எல்லைக்குள் ஊடுருவி ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றுள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தும் பாகிஸ்தான் உதவியின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது தெரியும் என அந்தோனி மேலும் கூறினார்.

இந்த சம்பவங்கள் மற்றும் இவ்வாண்டு ஜனவரி மாதம் 2 இந்திய ராணுவ வீரர்களின் தலைகளை துண்டித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் ஆகியவற்றுக்கு பாகிஸ்தானில் காரணமாக இருந்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியாது. தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தீவிரவாத முகாம்களை கூண்டோடு ஒழிக்க வேண்டும். எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆகஸ்ட் 6 ம் தேதி சம்பவத்தில், பாகிஸ்தன் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்களுடன் அந்நாட்டு ராணுவத்தின் சிறப்பு பிரிவினர் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோடுக்குள் ஊடுருவி இந்திய ராணுவத்தினரை சுட்டுக் கொன்றனர் என்று இப்போது தெளிவாகியிருக்கிறது என அந்தோனி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்