முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் போர்க் கப்பல்கள் குறித்து சீனா அச்சம்

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

பெய்ஜிங், ஆக. 22 - இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பல் ஐ.என்.எஸ் விக்ரந்த் மற்றும் அணுசக்தியால் இயங்கும் அரிஹாந்த் நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டதை மிகப் பெரிய ராணுவ கட்டமைப்பாக சீனா கருதுகிறது.

சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ் இணையதளத்தில் இதுபற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரையில், இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் ஆகஸ்ட் 12 ம் தேதி ஐ.என்.எஸ். விக்ராந்த் அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பல். ஜப்பானின் போர்க்கப்பல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருசில நாட்களிலேயே இந்தியாவும் அறிமுகம் செய்திருக்கிறது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருக்கும் இந்திய ஊடகங்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 5 வது இடத்தில் இந்தியா சேர்ந்துள்ளதாக பாராட்டியுள்ளன. இந்தியாவின் கப்பல் கட்டுமானத் துறையில் இது மைல்கல் என்றெல்லாம் பாராட்டுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்