முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்டர்நெட் மையங்களில் கண்காணிப்பு காமிரா மதுரை போலீஸ் கமிஷனர் உத்தரவு

திங்கட்கிழமை, 9 மே 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை, மே.- 9 - மதுரையில் உள்ள இன்டர்நெட் மையங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; மதுரையில் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் சி.டி.கடைகளில் ஆபாச படம் மற்றும் புதுப்பட சி.டி. க்கள் 15 ஆயிரம் வைத்திருந்ததாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும செல்போன் கடைகளில் புதுசெல்போன் வாங்கினால் ஆபாச படங்கள் இலவசமாக பதிவு செய்து கொடுப்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள இன்டர்நெட் மையங்களில் மாணவர்கள் ஆபாச படங்கள் பார்த்து வருவதாகவும், மேலும் செல்போன்களில் ஆபாச படங்கள் பதிவிறக்கம் செய்யப்படுவதாகவும் தகவல் வந்தது. இது சம்பந்தமாக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை செல்லூரில் உள்ள இன்டர்நெட் மையத்தில் ஆபாச படங்கள் பதிவிறக்கம் செய்ததாக 9 கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள  இன்டர்நெட் மையங்களில் கண்காணிப்பு காமிராக்கள் கட்டாயம் பொருத்தவேண்டும் யார் -யார்? வருகிறார்கள் என்பதை கண்காணிக்க வருகை பதிவேடும் வைக்கவேண்டும். இன்டர்நெட் மையங்களில் வந்து செல்பவர்களின் முழு முகவரியையும் சேகரிக்க வேண்டும். இன்டர்நெட் மையங்களில் கண்காணிப்பு காமிராக்கள் வைக்கப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட இன்டர்நெட் மையங்களில் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்