முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திக்விஜய் சிங்கிற்கு எதிராக உ.பி.காங்கிரசார் போர்க்கொடி

திங்கட்கிழமை, 9 மே 2011      இந்தியா
Image Unavailable

வாரணாசி, மே.- 9 -  காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கிற்கு எதிராக உத்திரப்பிரதேச மாநில காங்கிரசார் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். உத்திரப்பிரதேச மாநில காங்கிரஸ் அரசியல் விவகாரத்தை கவனிக்கும் பொறுப்பில் இருந்து திக்விஜய் சிங்கை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். அகில் இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருக்கும் திக்விஜய் சிங்கின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் காங்கிரஸ் தொண்டர்களை இழிவுபடுத்தும் வகையிலும் அவமதிக்கும் வகையிலும் இருப்பதால் அவரை உத்திரப்பிரதேச மாநில காங்கிரஸ் அரசியல் விவகாரத்தை கவனிக்கும் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வாரணாசி காங்கிரஸ் கிளையை சேர்ந்தவர்கள் கோரியுள்ளனர்.
வரும் 2012-ம் ஆண்டில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அதனால் மாநில காங்கிரஸ் அரசியல் விவகாரத்தை கவனிக்கும் பொறுப்பில் இருந்து திக்விஜய் சிங்கை நீக்க வேண்டும். இதுகுறித்து சோனியா கவனத்திற்கு கொண்டு செல்வோம். திக்விஜய் சிங்கை நீக்காவிட்டால் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறுவது கேள்விக்குறிதான் என்று மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜேஷ் ஹாத்ரி நேற்று வாரணாசியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். திக்விஜய் சிங் தனது நடவடிக்கையின் மூலம் கட்சிக்காக அர்ப்பணித்த அடிமட்ட தொண்டர்களை அவமதித்தும், அவமானம் செய்தும் வருகிறார் என்றும் ஹாத்ரி மேலும் கூறினார். ஊழலை எதிர்த்து காந்தீயவாதி ஹஸரே உண்ணாவிரதம் இருந்தது, மற்றும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பின்லேடனை முஸ்லீம் மதசடங்குப்படி அடக்கம் செய்திருக்க வேண்டும் என்று திக்விஜய் சிங் கூறியது கட்சி கொள்கைக்கு மாறானது மட்டுமல்ல, கட்சியின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. சிங்கை நீக்கக்கோரி வருகின்ற 18-ம் தேதி நாங்கள் வாரணாசியில் உண்ணாவிரதம் இருக்க உள்ளோம் என்றும் ஹாத்ரி மேலும் கூறினார். ராகுல் காந்தியின் ஆதரவாளராக திக்விஜய் சிங் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்