முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரம் திமுக நகராட்சி தலைவர் உட்பட 7 பேர் மீது வழக்கு 2 பேர் கைது

திங்கட்கிழமை, 9 மே 2011      தமிழகம்
Image Unavailable

ராமேஸ்வரம் மே  - 9 -  ராமேஸ்வரம் டோல்கேட்டில் வாகனங்களுக்கு போலி டிக்கெட் கொடுத்தது தொடர்பாக திமுக நகராட்சி தலைவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நகராட்சி ஊழியர்கள் இருவரை கைது செய்தனர்.
ராமேஸ்வரம் நகராட்சிக்கு சொந்தமான டோல்கேட் நுழைவு வாயில் உள்ளது. இந்த நுழைவு வாயிலில் நகராட்சி நிர்வாகத்திற்கு கணக்கு வராமல் போலி டிக்கெட்டுக்களை அச்சடித்து ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வாகனம், அரசு பேருந்துகளில் பலி ரசீதை கொடுத்து பணம் வசூலித்து வந்தனர். இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கு பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக ராமேஸ்வரம் எதிர்கட்சி நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் நகராட்சி ஆணையரிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் டோல்கேட் நிர்வாகம் தொடர்பாக உயர் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஏ.எஸ்.பி.சிபி சக்கரவர்த்தியிடம் புகார் வந்தது. உடனே அவரது தலைமையில் ராமேஸ்வரம் டி.எஸ்.பி. மதுரைச்சாமி,ராமேஸ்வரம் நகராட்சி பொறியாளர் ரத்தினவேல் உள்ளிட்ட நகராட்சி, போலீசார் நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் டோல்கேட்டில் அதிரடிசோதனையில் ஈடுபட்டனர். இதில் போலி ரசீதுகள் 400ம், ரூபாய் 6400ஐயும் போலீசார் கைப்பற்றினர். அப்போது பணியில் இருந்த பகுர்தீன் என்பவர் ஆயிரக்கணக்கான போலி டிக்கெட்டுகளையும்,போலி ரசீது
களையும், கணக்கில் வராத பணத்தையும் பையில் அள்ளிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் பணியில் இருந்த நகராட்சி ஊழியர்கள் புதுரோடுயை சேர்ந்த பூமி, ராமேஸ்வரத்தை சேர்ந்த முனியசாமி ஆகிய இருவரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திமுக நகராட்சி தலைவர் ஜலீல் போலியான ரசீதுகளை அச்சடித்து, எங்களிடம் கொடுத்து வாகனங்களில் பணம் வசூலிக்க சொல்வார். பின்னர் தினமும் 200 வாகனங்களுக்கான பணத்தை வாங்கிச் செல்வார் என தெரிவித்தனர். இதனை அடுத்து நகராட்சி தலைவர் ஜலீல், பகுர்தீன்,பூமி, முனியசாமி உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தலைமறைவான நகராட்சி தலைவர் ஜலீல், பகுர்தீன் உட்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நகராட்சி தலைவர் ஜலீல் மீது ஏற்கனவே ஆள் கடத்தல், தாக்குதல் வழக்கும், டீக்கடைகள் சேதப்படுத்திய வழக்கும், அரசு மருத்துவமனை நர்சுகளை அவதூராக பேசிய வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சமீபத்தில் கீழக்கரையை சேர்ந்த முஸ்லீம் பெண்ணை கற்பழித்தது தொடர்பாக ஜலீல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டோல்கேட் வசூல் கடந்த 4 ஆண்டுகளாக போலி டிக்கெட் கொடுத்து பலகோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் நகராட்சி தலைவர் ஜலீல் உள்ளிட்ட சில அரசியல் கட்சி நிர்வாகிகள், நகராட்சி மன்ற கவுன்சிலர்கள், நகராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கிட்டு உள்ளதாக தெரிய வருகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்