முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைவா பட வழக்கு: செப்-10-ல் தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 27 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

சென்னை, ஆக.28 - தலைவா படத்தின் கதை தனது தாத்தா, தந்தையை பற்றியது என்றும் அதைமையமாக வைத்து எடுக்கப்பட்டது. அதில் தவறாக தங்கள் குடும்பத்தை சித்தரித்துள்ளதாக கர்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட் செப்டம்பர் 10ந் தேதி ஒத்திவைக்கப்பட்டது. சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில், நெல்லை மாவட்டம் சீதாபார்பநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.கே.ஆர்.கர்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எஸ்.எஸ்.கே. என்று அழைக்கப்படும் எஸ்.எஸ்.கந்தசாமி சேட், சுதந்திரத்துக்கு முன்பே சீதாபார்பநல்லூரில் இருந்து மும்பை தாராவிக்கு சென்று, தோல் பதனிடும் தொழிலை செய்து வந்தார். இவர், தாராவி தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

தென் இந்திய ஆதிதிராவிட மகாஜன் சங் என்ற அமைப்பு உட்பட பல அமைப்புகளின் தலைமை பதவியை வகித்தார்.

எஸ்.எஸ்.கே.வின் மகனும், என் தந்தையுமான எஸ்.கே.ராமசாமி, பல்வேறு சமுதாய சேவைகளை செய்து, பிரபலமடைந்தார். இவரை தாராவியின் தலைவர் என்று மக்கள் அழைத்தனர்.

இந்த நிலையில் பத்திரிகை செய்தியை படித்தபோது, எனது தாத்தா மற்றும் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'தலைவா' என்ற படம் தயாரிக்கப்படுவதாக தெரியவந்தது. இந்த படத்தில், என் தாத்தா, தந்தை ஆகியோர் 'தாதா' போல சித்தரிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி தீபிகா சுந்தரவதனா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  தலைவா படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தலைவா படத்தின் கதை தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படவில்லை. இந்த படத்தின் கதை கற்பனையானது. தலைவா படத்தின் முதல் பகுதி ஆஸ்திரேலியா நாட்டிலும், பின்பகுதி மும்பையும் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் கதாநாயகன், கதாநாயகி யாரும் தாராவி பகுதியில் வாழ்வது போன் காட்சிகள் இடம் பெறவில்லை. சத்தியராஜ் கதாபாத்திரம், தமிழர்களுக்கு உதவி செய்வது போன்ற காட்சிகள் மட்டுமே வருகிறதே தவிர, அவர் தொழில் எதுவும் செய்வது போல் காட்டப்படவில்லை.

அவர் எந்த சங்கத்தையும் தலைமை ஏற்று நடத்தவில்லை. எனவே கர்ணனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர், இருதரப்பு வக்கீல்கள் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தீபிகா சுந்தரவதனா, வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 10-ந் தேதி பிறப்பிப்பதாக உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்