முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் முன்னேற்றம்

புதன்கிழமை, 28 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

நியூயார்க், ஆக. 29 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி யில் முன்னணி வீரர்களான ஜோகோ விக், ரோஜர் பெடரர் மற்றும் அசரென் கா ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர். இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓப ன் டென்னிஸ் முக்கிய நகரமான நியூயார்க்கில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்ட த்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களம் இறங்கி உள்ளனர். இந்தப் போட்டி காலிறுதி யை நோக்கி முன்னேறி வருகிறது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் முத ல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் உலக நம்பர் - 1 வீரரான நோவக் ஜோகோவிக் மற்றும் லாத்வியா வீரர் மோதினர்.

இதில் செர்பிய வீரர் நோவக் அபார மாக ஆடி, 6 -1, 6 -2, 6 -2 என்ற நேர்செ ட் கணக்கில் ரிச்சர்ட்சை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெட ரர் மற்றொரு முதல் சுற்றில் சுலோவே

க்கிய வீரருடன் மோதினார்.  

இந்தப் போட்டியில் அனுபவம் வாய்ந்த பெடரர் எளிதாக வெற்றி பெற்றார். அவர் 6 -3, 6 -2, 7 -5 என்ற நேர் செட்கணக்கில் ஜெம்விகாவை தோற்கடித் தார். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் முத ல் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை விக் டோரியா அசரென்காவும், ஜெர்மனி வீராங்கனையும் மோதினர். 

இதில் 2-ம் நிலை வீராங்கனையானஅசரென்கா சிறப்பாக ஆடி 6 -0, 6 -0 என்ற நேர் செட்டில் டினாக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தாவினார். 

மற்ற ஆட்டங்களில் இத்தாலி வீராங்க னை சாரா இராணி, செர்பிய வீராங்க னை அனா இவானோவிக், ரஷ்ய வீரா ங்கனை குஜ்னெட்சோவா ஆகியோர் வெற்றி பெற்று 2- வது சுற்றுக்கு முன் னேறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்