முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் ஒரு நாள்: ஜிம்பாப்வே பாகிஸ்தானை வீழ்த்தியது

புதன்கிழமை, 28 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஹராரே, ஆக. 29 - பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட்போட்டியில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்வித்தியாசத்

தில் அபார வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணி தரப்பில்துவக்க  வீரர்களாக இறங்கிய சிபாண்டா மற்றும் மசகட்ஜாஇருவரும் அபாரமாக பேட்டிங்செய்து அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.அவர்களுக்கு பக்கபலமாக, கேப்டன் டெய்லர் , வில்லியம்ஸ் மற்றும் மருமா ஆகியோர் ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின் போது, விடோரி, சதாரா மற்றும் உத்செயா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி பாக்.அணியின் ரன் ரேட்டைக் கட்டுப் படுத்

தினர். பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா உல் ஹக் தலைமையில் ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் பிரண்டன்டெய்லர் தலைமை

யிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்டஒரு நாள் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதன் முதல் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்க பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து  244 ரன்னை எடுத்தது. 

பாகிஸ்தான் அணி தரப்பில், கேப்டன் மிஸ்பா உல் ஹக் அதிகபட்சமாக 85 பந்தில் 83 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். மொகமது ஹபீஸ் 71 பந்தில்70 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்அடக்கம்.தவிர, நசீர் ஜாம்ஷெட் 27ரன்னையும், அகமது ஷெஜாட்24 ரன்னையும் எடுத்தனர். ஜிம்பாப்வேஅணி சார்பில் சதாரா 32 ரன்னைக் கொடுத்து2 விக்கெட்எடுத்தார். தவிர, விட்டோரி 2 விக்கெட்டும், உத்செயா1 விக்கெட்டும்எடுத்தனர். ஜிம்பாப்வேஅணி 245 ரன்னைஎடுத்தால் வெற்றி பெறலாம் என்றஇலக்கை பாக். அணி வைத்தது. அடுத்துகளம் இறங்கிய அந்தஅணி 48.2 ஓவரில் 3 விக்கெட்இழப்பிற்கு 246 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த முதல் ஒரு நாள்போட்டியில் ஜிம்பாப்வேஅணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட

இந்தத் தொடரில்1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. ஜிம்பாப்வே அணி தரப்பில் துவக்க வீரர் மசகட்ஜா அதிகபட்சமாக 104 பந்தில் 85 ரன்னை எடுத்தார். இதில் 9 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். மற்றொரு துவக்க வீரரான சிபாண்டா 82 பந்தில் 54 ரன் எடுத்தார். இதில் 6 பவு

ண்டரிஅடக்கம். தவிர, கேப்டன் டெய்லர் 59 பந்தில் 43 ரன்னையும், வில்லியம்ஸ் 39 ரன்னையும், மருமா 18 ரன்னையும் எடுத்தனர். 

பாகிஸ்தான் அணி சார்பில், முன்னணி சுழற் பந்து வீச்சாளரான சயீத் அஜ்மல் 44 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்எடு

த்தார்.தவிர, மொகமது இர்பான் மற்றும் ஜூனைத்கான் இருவரும் தலா 1 விக்கெட்எடுத்தனர். இந்தப் போட்டியிந் ஆட்டநாயகனாக மசகட்ஜா தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago