முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்டம்பர் 7-ல் தமிழ் திரைப்பட தயாரிப்பு சங்க தேர்தல்

புதன்கிழமை, 28 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.29 - சென்னையில் நடைபெற்ற விழாவில் செப்டம்பர் 7-ல் தமிழ் திரைப்பட தயாரிப்பு சங்க தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் கே.ஆர். தலைமையில் அணி சரத்குமார் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்தார். தமிழ் தயாரிப்பாளர் சங்க நலன் காக்கும் என்ற அணி சார்பில் தலைவர் கே.ஆர்.போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து கலைபுலி எஸ்.தாணு போட்டியிடுகிறார். துணை தலைவர் பதவிக்கு டி.ஜி.தியாகராஜன், என்.எஸ்.போஸ் போட்டியிடுகின்றனர். செயலாளர் பதவிக்கு டி.சிவா, ஞானவேல்ராஜா போட்டியிடுகிறார்கள். பொருளாளர் பதவிக்கு ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ஏ.எல்.அழகப்பன், கே.பாலு, கோபு பொன்னுரங்கன், சித்ராலட்சுமி, நடிகை தேவையானி, எஸ்.எஸ்.துரைராஜ், கமிலா நாசர் முருகன் கே.ராஜன், டி.டி.ராஜா செளந்தர், விஜயக்குமார், காஜாமைதின், முரளி, டி.மதன், வேதா, பிரமிட் நடராஜன், விஜயமுரளி, ஜாக்குவார் தங்கம், ஆர்.வி.உதயகுமார் உட்பட 21 பேர் செயற்குழு உறுப்பினராக போட்டியிடுகின்றனர். இந்த அணியில் வேட்பாளர்களை நடிகரும், தயாரிப்பாளர்களுமான, சரத்குமார் எம்.எல்.ஏ., அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முக்தா சீனிவாசன், சரத்குமார் மற்றும் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அவரவர் கருத்துக்களை எடுத்து கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்