முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்வில் தவறியவர்கள் உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

திங்கட்கிழமை, 9 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.10 - பிளஸ் 2 தேர்வில் தவறியவர்கள், உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்து அனுப்ப வருகிற 13ம் தேதி கடைசி நாள் ஆகும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.  இதனைத்தொடர்ந்து மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்த முழு விபரம், அந்தந்த பள்ளிகளிலேயே காலை 10.00 மணிக்கு அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்பட்டது. மதிப்பெண் பட்டியல் வரும் 25- தேதி பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பெற்று கொள்ளலாம். தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியலை பெறலாம்.

நடந்த முடிந்த தேர்வில் 3 மற்றும் அதற்கு குறைவான பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அடுத்த மாதம் உடனடி தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு பாடத்துக்கு ரூ.85, இரண்டு பாடங்களுக்கு ரூ.135, மூன்று பாடங்களுக்கு ரூ.185 தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 13-ம் தேதிவரை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம். 

தனி தேர்வர்களுக்கான உடனடி தேர்வு விண்ணப்பங்கள், வருகிற 16 முதல் 20-ம் தேதிவரை வினியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 24-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். உடனடித் தேர்வுகள் ஜூன் 22-ல் தொடங்கி ஜூலை 2-ம் தேதிவரை நடக்கும்.

விடைத்தாள் நகல் பெறவும் மறு கூட்டல் செய்யவும் வருகிற 11 முதல் 16-ம்தேதிவரை விண்ணப்பம் வழங்கப்படும். அனைத்து முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், இணை இயக்குனர் (கல்வி) புதுச்சேரி, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெறலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago