முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன்: வீனஸ் அதிர்ச்சி தோல்வி

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க், ஆக. 30 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் சோம்தேவ் வர்மன் வெற்றி  பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் அமெரிக்க முன்னணி வீராங்க னைகளில் ஒருவரான வீனஸ் வில்லிய ம்ஸ் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 

இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓப ன் டென்னிஸ் முக்கிய நகரமான நியூயார்க்கில் கடந்த சில நாட்களாக வெ கு விமர்சையாக நடந்து வருகிறது . 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற் றும் வீராங்கனைகள் களத்தில் குதித்து உள்ளனர். இந்தப் போட்டி காலிறுதி யை நோக்கி முன்னேறி வருகிறது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் முத ல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் இந்திய இளம் வீரரான சோம்தேவ் வர்மனும், சுலோவேக்கிய வீரரும் மோதினர். 

இந்தப் போட்டியில் கடும் போராட்ட த்திற்குப் பின்பு வர்மன் வெற்றி பெற்றார். அவர் இறுதியில் 4 -6, 6 -1, 6 -3, 6-2,4-6, என்ற செட் கணக்கில் லூகாஸ் லக்கோவை தோற்கடித்து 2-வது சுற் றுக்கு தகுதி பெற்றார். 

மகளிர் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றி ல் அமெரிக்காவின் முன்னணி வீராங் கனைகளில் ஒருவரான வீனஸ் வில்லி யம்ஸ் சீன வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 

இந்த ஆட்டத்தில் சீன வீராங்கனை ஜீயெங்க் 3 -6, 6 -2, 6 -2 என்ற செட் கணக்கி ல் போராடி வீனஸ் வில்லியம்சை வீழ் த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 

போலந்தின் முன்னணி வீராங்கனையான அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவும், ஸ்பெயின் வீராங்கனையும் மற்றொரு ஆட்டம் ஒன்றில் மோதினர். 

இதில் அனுபவம் மிக்க போலந்து வீராங்கனை சிறப்பாக ஆடி வெற்றி பெற்றார். அவர் 6 -0, 7 -5 என்ற நேர் செட் கணக்கில் மரியா தெரசாவை தோற்க டித்தார். 

மற்றொரு ஆட்டம் ஒன்றில் சீன முன்ன ணி வீராங்கனையான நாலீ 6 -2, 6 -4 என்ற செட் கணக்கில் சுவீடன் வீராங் கனை சோபியாவை வென்றார். 

ஸ்பெயின் வீராங்கனையான லாரா நவரோ மற்றொரு ஆட்டத்தில் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரா ங்கனையை வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்