முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலத்தில் 2-ம் இடம் பிடித்த மாணவன் வேல்முருகன் விருப்பம்

திங்கட்கிழமை, 9 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

விழுப்புரம், மே 10 - பிளஸ் டூ தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்த விழுப்புரம் மாணவன் வேல்முருகன் டாக்டராகி தனது சொந்த ஊருக்கு சேவை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.  பிளஸ் டூ தேர்வில் கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் பள்ளி மாணவன் வேல்முருகன் 1187 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே இரண்டாவது இடத்தைப் பெற்றார். மாணவர்களில் முதலிடமும், விழுப்புரம் மாவட்டத்தில் முதலிடமும் பெற்ற வேல்முருகன் பெற்ற மதிப்பெண்கள் :

தமிழ் 194

ஆங்கிலம் 194

இயற்பியல் 200

வேதியியல் 200

உயிரியல் 199

கணிதம் 200

மொத்தம் 1187

வேல்முருகனின் சொந்த ஊர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தென்கீரனூர். இவரது தந்தை பெயர் செல்வராஜ். கள்ளக்குறிச்சி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கணக்காளராக உள்ளார். தாயார் பெயர் ராஜகுமாரி. இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.  சகோதரர்கள் இரண்டுபேருமே  என்ஜீனியர்கள்.

மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்தது குறித்து வேல்முருகன் கூறியதாவது:-

நான் டாக்டருக்கு படித்து எனது சொந்த ஊரில் மருத்துவமனை கட்டி ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வேன். இந்த அளவு மதிப்பெண்கள் எடுத்ததற்கு எனது ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோரே காரணம். இயற்பியல் ஆசிரியர் செந்தில்குமார், வேதியியல் ஆசிரியர் சரவணன் ஆகியோர் கடைசி கட்டம் வரை எனக்கு நன்றாக சொல்லிக் கொடுத்தார்கள். அதனால்தான் அதிக மதிப்பெண் எடுக்க முடிந்தது. நான் முதலிடம் பிடிப்பேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இரண்டாவது இடம் பிடித்ததற்காக வருத்தப்படவில்லை. 

இவ்வாறு வேல்முருகன் தெரிவித்தார்.

மாணவர் வேல்முருகனை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி, கல்வி அதிகாரி குப்புசாமி, பள்ளி தாளாளர்கள் கந்தசாமி, லட்சுமி ஆகியோர் பாராட்டினர். பாரதி மெட்ரிக் பள்ளி மாணவர்களும் வேல்முருகனுக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago