முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி பள்ளிகள் கூடுதல் தேர்ச்சி பெற்று சாதனை

திங்கட்கிழமை, 9 மே 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,மே.10 - பிளஸ் -2 தேர்வில் தேர்வில், கடந்தாண்டை விட இந்தாண்டு மதுரை மாநகராட்சி பள்ளிகள் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மதுரை மாநகராட்சி பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளை ஆணையாளர் செபாஸ்டின் பாராட்டி பரிசு வழங்கினார். பின்பு ஆணையாளர் நிருபர்களிடம் கூறும்போது, மதுரை மாநகராட்சியில் 14 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 2314 மாணவ -மாணவியர்கள் கடந்தாண்டு மேல்நிலை தேர்வு எழுதினர். இதில் 2049 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 88.5 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை விட 1 சதவீதம் கூடுதல் தேர்ச்சி விகிதமாகும். மதுரை மாநகராட்சி பள்ளிகள் அளவில், காக்கைபாடினியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.கவிதா 1146 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், ஈ.வெ.ரா.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஓய்.பரணி என்பவர் 1142 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும் திரு.வி.க. மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.அனிதா  1124 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். மாநகராட்சி சார்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படும். 1000-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு வெள்ளையன் கல்வி அறக்கட்டளை என்ற தனியார் நிறுவனம் மாணவர்களின் மேல்படிப்பற்கு தேவையான உதவிகள் செய்ய முன்வந்துள்ளது பாராட்டுதலுக்குரியது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்