முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங். கூட்டணி அரசு மீது இல.கணேசன் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 9 மே 2011      அரசியல்
Image Unavailable

 

திருப்பூர்,மே.10 - பயங்கரவாதத்தை ஒடுக்கும் சக்தியை காங்கிரஸ் கூட்டணி அரசிடம் எதிர்பார்க்க முடியாது என்று பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் கூறினார். 

தேர்தல் பணி வாக்குப்பதிவு ஆய்வு குறித்தும் அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல்களுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய இல. கணேசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

பின்லேடனை அமெரிக்கா கொன்றதில் இருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும். இந்த சம்பவத்துக்கு பிறகு தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் வரும் என்று கருதி தொடர்ந்து அல்கொய்தா அமைப்பு மீது அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது. 

ஆயினும் உலக அளவில் பயங்கரவாதத்திற்கு அமெரிக்கா எதிரானது என்ற முடிவுக்கு வர முடியாது. பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது. சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராகிமை பாதுகாப்பாக வேறு நாட்டுக்கு அனுப்ப பாகிஸ்தான் துணை புரிந்துள்ளது. நம்மிடம் திறமையான உளவுத் துறை, அணு ஆயுதம் தயாரிக்க கூடிய திறமை மிக்க விஞ்ஞானிகள் உள்ளனர். ஆளுமை உள்ள தலைமை வருமானால் இந்தியாவும் 40 நிமிடங்களில் நாட்டை சூழ்ந்துள்ள பயங்கரவாதத்தை முறியடிக்க முடியும். அந்த திறமையை காங்கிரஸ் கூட்டணி அரசிடம் எதிர்பார்க்க முடியாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்