முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்க செனட் ஒப்புதல்

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,செப் 6 - சிரியா மீது தாக்குதல் நடத்த சில நிபந்தனைகளுடன் அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.  சிரியாவில் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. அதிபருக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இப்படி போராட்டம் நடத்திய கிளர்ச்சியாளர்கள் மீது அரசு படைகள் ரசாயண தாக்குதல் நடத்தியதில் 1000 க்கும் மேற்ப்பட்டோர் பலியானார்கள். இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிரியாவை அமெரிக்கா கண்டித்தது. அந் நாடு மீது தாக்குதல் நடத்தவும் அமெரிக்க அதிபர் ஒபாமா முடிவெடுத்தார். ஆனால் ரஷ்ய அதிபர் புட்டீன் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரசாயண ஆயுதங்கள் சிரியாவில் இருப்பதை நிரூபிக்கவேண்டும். அந் நாடு மீது தாக்குதல் நடத்த ஜ.நா வின் ஒப்புதலை பெற வேண்டும். அப்படி செய்யாமல் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று புட்டீன் எச்சரித்தார்.

 இந்த நிலையில் சிரியா மீது தாக்குதல் நடத்த சில நிபந்தனைகளுடன் அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது தாக்குதலின் போது தரைப்படைகளை பயன்படுத்தக்கூடாது. ரசாயண ஆயுதங்கள் இருந்தால் அவற்றை 60-நாளில் அழித்துவிட வேண்டும். போன்ற நிபந்தனைகளுடன் அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. எனவே சிரியா மீது அமெரிக்கா தனது தாக்குதலை எந்த நேரத்திலும் தொடங்கலாம் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்தாக குற்றம் சாட்டி ஈராக் மீது சில ஆண்டுகளுக்கு தாக்குதல் நடத்தியதை போல சிரியா மீது தாக்குதல் நடத்தவும் அமெரிக்கா திட்டமிட்டு இருப்பதை அரபு நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன. காரணம் அமெரிக்காவின் பேராசையே என்றும் எண்ணெய் வளம் உள்ள நாடுகளைத் தான் அது குறிவைக்கிறது என்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களும் கூறிவருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்