முக்கிய செய்திகள்

பாகிஸ்தானில் நடந்த மனித குண்டு தாக்குதலில் 3 போலீசார் பலி

Pakistan-Attack

இஸ்லாமாபாத்,மே.11 - பாகிஸ்தானில் கோர்ட் அருகே நடந்த மனித குண்டு தாக்குதலில் 3 போலீசார் பலியாகினர்.பாகிஸ்தான் கபா மாகாணத்தில் பெஜாவர் என்ற ஊரில் உள்ள செசன்ஸ் கோர்ட் வளாகத்தின் மெயின் கேட் அருகே நேற்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் கோர்ட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 3 போலீசார் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் பெண் போலீசாராவார். மேலும் 2 போலீசார் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்கொலை தீவிரவாதிகள் மனித குண்டு தாக்குதலில் ஈடுபட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். உடலில் கட்டியிருந்த குண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க செய்துள்ளனர் என்றும் கூறினர். இச்சம்பவத்துக்கு பிரதமர் கிலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: