முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.இ. படிப்பிற்கான கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு கடும் போட்டி

செவ்வாய்க்கிழமை, 10 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மே.11 - தமிழகத்தில் இந்த ஆண்டு பி.இ. படிப்பில் சேர்வதற்குரிய கட் - ஆப் மதிப்பெண்ணுக்கும் கடும் கட் - ஆப் போட்டி ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவில் பி.இ. படிப்பில் சேருவதற்கு உரிய முக்கிய பாடங்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200 க்கு 200 மதிப்பெண்ணை கடந்த ஆண்டுகளை காட்டிலும் அதிகமாக 120 மாணவர்கள் பெற்றுள்ளனர். பி. இ. படிப்புக்குரிய கட் ஆப் மதிப்பெண்களை பொருத்தவரை 200 ல் தொடங்கி ஒவ்வொரு கட் ஆப் மதிப்பெண்ணுக்கும் இடையே ஆயிரம் மாணவர்களுக்கு மேல் உள்ளனர். அதாவது, 200 க்கும் 199 கட் ஆப் மதிப்பெண் வாங்கியுள்ள மாணவர்களை காட்டிலும் அதிகமாக 1,174 மாணவர்கள் கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200 க்கு 199 ஐ காட்டிலும் இந்த ஆண்டு ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 565 அதிகமாகும். 

ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200 க்கு 198 ஐ இந்த ஆண்டு 2,717 மாணவர்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த ஆண்டு பி.இ. படிப்புக்கு உரிய ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200 க்கு 198 ஐ பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பி.இ. படிப்புக்கு உரிய கட் ஆப் மதிப்பெண் இந்த ஆண்டு கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளதால் அண்ணா பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கிண்டி பொறியியல் கல்லூரி உட்பட சிறந்த கல்லூரிகளில் மிக அதிக கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களுக்கே விரும்பிய பொறியியல் பாடப் பிரிவு கிடைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்