முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

அபுஜா, செப். 9 - நைஜீரியாவில் பயங்கரவாதிகள் 50 பேரை அந்நாட்டு ராணுவம் சுட்டுக் கொன்றது. நைஜீரியாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள போர்னேரி மாகாணத்தில் நைஜீரிய ராணுவம் நடத்திய தாக்குதலில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் 50 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த வாரம் இப்பகுதியில் உள்ள கிராமங்கள் மீது தாக்கியதில் 15 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம் இந்த நடவடிக்கையை எடுத்ததோடு பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த கிராமத்தையும் விடுவித்ததாக அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் சகீர் முஷா தெரிவித்தார். 

நைஜீரியாவின் வடக்கு பிராந்தியத்தில் பயங்கரவாத முஸ்லீம் பயங்கரவாதிகளால் அவ்வப்போது கலவரம் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இதையடுத்து தீவிரவாதிகளால் பிரச்சினை ஏற்பட்டுள்ள 3 மாநிலங்களில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நைஜீரியாவில் உள்ள 1.5 கோடி மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் சரிசமமாக உள்ளனர். நைஜீரியாவில் முஸ்லீம்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக பயங்கரவாதிகள் நைஜீரியாவில் அவ்வப்போது கலவரத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்