முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திரா அருகே காற்றழுத்த தாழ்வு: 3 நாட்களுக்கு மழை

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.11 - தமிழகம் - புதுச்சேரியில் கடந்த 1 வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வட மாவட்டங்களில் நேற்று நள்ளிரவில் கனமழையும் பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை: சென்னையில் நேற்று காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதன்பின்னர் மதிய நேரங்களில் வெயில் அதிகமாக இருந்தது. மாலை 4 மணிஅளவில் மீண்டும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து இரவு இடி-மின்னலோடு பலத்த மழை கொட்டியது. இந்த மழை தொடர்ந்து பெய்யும். 

மழை கொட்டியதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு மத்தியிலேயே சென்றனர். சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது ஆந்திரா அருகே வங்க கடலில் வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட காற்று சூழ்ற்சி காரணமாக கனமழை பெய்து வந்தது. மேலும் ஆந்திரா அருகே வங்க கடலின் மேற்கு மத்திய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையும் சற்று நகர்ந்து வருகிறது. இதனால் இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.

வட மாவட்டங்களில் அனேக இடங்களிலும், தென் மாவட்டங்களிலும் ஓரிரு பகுதிகளிலும் கனமழை எதிர்பார்க்கலாம்.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது கனமழை பெய்யும். இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை நிலைய இயக்குனர் ரமணன் தெரிவித்தார்.

சென்னையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மழை தூறல்களும் விழுந்தன. இன்று அதிகாலை 8.30 மணி வரை மீனம்பாக்கத்தில் 1.6.மி.மீ. மழையும், நுங்கம்பாக்கத்தில் 0.2 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்