முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 2-வது மெட்ரோ ரெயில் விரைவில் வருகிறது

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 11 - சென்னை மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோயம்பேடு பஸ் நிலையத்தின் உள்ளே அமையும் ரெயில் நிலையம், கோயம்பேடு ரெயில் நிலையம் ஆகியவற்றின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.

அரும்பாக்கம் ரெயில் நிலையத்தில் தரைதளம், பயணிகள் நிற்கும் இடம் ஆகியவை தயாராகி விட்டன. பிளாட்பாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி இந்த மாத இறுதிக்குள் முடிவடையும். மின்பாதை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

அரும்பாக்கம், கோயம்பேடு, கோயம்பேடு பஸ் நிலையம், வடபழனி, அசோக்நகர் ஆகிய 5 ரெயில் நிலையங்களும் 139.54 கோடி செலவில் கட்டப்படுகிறது.

ஒவ்வொரு ரெயில் நிலையத்தின் உள்ளே செல்வதற்கு 4 வழிகளும், வெளியே வருவதற்கு 4 வழிகளும் அமைக்கப்படுகிறது. 4 லிப்டுகள், 8 நகரும் படிக்கட்டு வசதிகளும் அமைக்கப்படுகிறது. ஊனமுற்றோர் செல்வதற்கு வசதியாக சாய்தள பாதையும் அமைக்கப்படுகிறது.

கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரை உள்ள 11 கிலோ மீட்டர் தூரத்தில் 7 கிலோ மீட்டர் தூரம் வரை தண்டவாளம் அமைக்கும் பணி முடிந்துள்ளது.இந்த வழித்தடத்தில் வருகிற டிசம்பர் மாதம் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். பின்னர் ரெயில் வெள்ளோட்டம் விடப்படும். அடுத்த ஆண்டு மத்தியில் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் ஓட தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டும் பணிகள் முடிவடைந்துள்ளன. சுரங்கப் பாதையில் இருவழித் தடங்களில் தனித்தனியாக ரெயில் செல்லும் வகையில் பாதை அமைக்கப்படுகிறது.

நேரு பூங்கா-எழும்பூர் இடையே 1015 மீட்டர், ஷெனாய் நகர்-திருமங்கலம் இடையே 1630 மீட்டர் புதுவண்ணாரபேட்டை-எழும்பூர் இடையே 3686 மீட்டர்.சென்ட்ரல்-மே தின பூங்கா இடையே 260 மீட்டர், மே தின பூங்கா-ஜெமினி மேம்பாலம் இடையே 770 மீட்டர், சைதாப்பேட்டை-ஜெமினி மேம்பாலம் இடையே 504 மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டி முடிக்கப்பட்டுள்ளது

மெட்ரோ ரெயிலுக்காக 9 ரெயில்கள் பிரேசிலில் இருந்து வாங்கப்படுகிறது. ஒவ்வொரு ரெயிலிலும் 4 பெட்டிகள் இருக்கும். இதில் முதல் ரெயில் ஏற்கனவே கொண்டு வரப்பட்டு கோயம்பேடு பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

2-வது ரெயிலும் பிரேசிலில் தயாராக உள்ளது. அதை சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்ததும் கப்பல் மூலம் சென்னை கொண்டு வரப்படும்.

பிரேசிலில் ரெயில் பெட்டிகளை தயாரிக்கும் ஆல்ஸ்டாம் நிறுவனம் தனது துணை நிறுவனத்தை ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள ஸ்ரீசிட்டியில் அமைத்துள்ளது. இங்கு மீதமுள்ள 35 ரெயில்களும் தயாரிக்கப்படுகிறது.

ஒரு ரெயில் பெட்டி தயாரிப்புக்கு ரூ.9 கோடி செலவாகிறது. மொத்தமாக ரெயில் பெட்டிகள் தயாரிப்புக்கு ஆயிரத்து 471 கோடியே 39 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago