முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்துக்கு கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரம்

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.11 - கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 யூனிட்டுகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு யூனிட் பணிகள் நிறைவடைந்துவிட்டது. இதன் சோதனை ஓட்டமும் நடந்தது. விரைவில் முதல் யூனிட் மின் உற்பத்தியை தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதில் உற்பத்தியாகும் 1000 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு முதல் யூனிட்டில் உற்பத்தியாகும் 1000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். பல்வேறு தரப்பினரும் தமிழ்நாட்டுக்கு கூடுதல் மின்சாரம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆரம்பத்தில் தமிழ் நாட்டுக்கு கூடங்குளம் யூனிட்டில் இருந்து 544. 1 மெகாவாட் மின்சாரம் வழங்க திட்டமிட்டு இருந்தது.

தற்போது தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரத்தை ஒதுக்கீடு செய்ய மத்திய மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ கடிதமும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி இனி கூடங்குளம் அணுமின்நிலைய முதல் யூனிட்டில் இருந்து தமிழ் நாட்டுக்கு 562.5 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். மீதம் உள்ள மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு அடுத்தப்படியாக கர்நாடகா மாநிலத்துக்கு 249.5 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகிறது. கேரளாவுக்கு 150.2 மெகாவாட், புதுச்சேரிக்கு 37.8 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago