முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டு: சிகாகோ தின ஓட்டம்

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.11 -  சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த ஆண்டினை (2013-14) முன்னிட்டு இவ்வாண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நாடெங்கிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக செப்.11 சிகாகோ தின விழிப்பு உணர்வு ஓட்டம் இன்று நடைபெறவுள்ளது.

1892 ஆம் வருடம் செப்டம்பர் 11 ஆம் தேதியன்று சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையே அவரை உலகறியச் செய்தது. அவர் அன்று ஆற்றிய அந்த உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கது. 120 வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியாக இருந்தபோதிலும், அன்று அவர் ஆற்றிய அந்த உரை, இன்றும்கூட உலகுக்குத் தேவையானதாக உள்ளது. அந்த வகையில், சிகாகோ தினமான செப்டம்பர் 11, இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாளாகக் கருதப் படுகிறது. அதை இளைஞர்களுக்கு நினைவுபடுத்தும் விதத்தில்இன்று செப்டம்பர் 11 ஆம் தேதியன்று நாடு தழுவிய அளவில் ாபாரத விழிப்புணர்வு ஓட்டம்ா நடைபெற உள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் 'பாரத விழிப்புணர்வு ஓட்டம்' நடைபெற உள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், சில முக்கியமான நகரங்களிலும் மாணவ மாணவியர், இளைஞர்கள் பங்கேற்கும் பாரத விழிப்புணர்வு ஓட்டம் நடைபெறுகிறது. 

சென்னையில் நடைபெறும் விழிப்பு உணர்வு ஓட்டத்தில், மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, ராமகிருஷ்ண மடத்தின் தலைமைத் துறவி சுவாமி கெளதமானந்தா உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்