முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழை கட்டாய பாடமாக்க ராமதாஸ் வேண்டுகோள்

புதன்கிழமை, 11 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.11 -  தமிழை கட்டாய பாடமாக்கவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை தயாரிக்கும்போது அதில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்படுவது வழக்கம். இந்த முறையும் அதேபோன்றுதான் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், ஒவ்வொரு பாடத்திலும் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை தயாரிக்கும்போது, அதில் தமிழை பாடமாக எடுத்து படிக்காதவர்களுக்கும் இடமளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்து ஒட்டுமொத்த மதிப்பெண் அடிப்படையில் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களில் சிலர், பாடவாரியான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிப்பவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிப்பதை ஊக்குவிக்கும் நோக்குடன்தான். தரவரிசைப் பட்டியலில் அவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. இதே அளவுகோலை பாடவாரியான தரவரிசைப் பட்டியல் தயாரிப்புக்கு தேர்வுத்துறை அதிகாரிகள் பின்பற்றாதது தமிழக அரசின் கொள்கைக்கு எதிரானதாக அமைந்திருக்கிறது.

இத்தகைய போக்கு தொடர்ந்தால் தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே பள்ளிப் படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்து பட்டம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். இதனால் தமிழ் இனி மெல்லச்சாகும் என்ற தேசிய கவி பாரதியாரின் வார்த்தைகள் மெய்யாகிவிடும் ஆபத்து உள்ளது. இப்படிப்பட்டதொரு நிலை ஏற்பட தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது.

தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தவர்களுக்கு மட்டுமே தரவரிசை வழங்கவேண்டும். அவர்களுக்கு மட்டுமே மாநில அரசின் பரிசுகளும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அனைவரும் தமிழை ஒரு பாடமாக படித்து செம்மொழியாம் தமிழ் மொழி செழித்து வளர வழி பிறக்கும்.

இதுபோன்ற சிக்கல்கள் எழாமல் இருக்க ஒரே தீர்வு தமிழை கட்டாயப்பாடமாக்குவதுதான். தமிழ்மொழி பாடத்தை ஒவ்வொரு ஆண்டுகளுக்கும் ஒவ்வொரு வகுப்புக்கு கட்டாயப் பாடமாக நீட்டித்து வருவதற்குப் பதில், அனைவரும் தமிழை கட்டாயமாக படிக்க வேண்டும் என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago