முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதி ஊர்வலங்களுக்கு தடை கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.11 - சாதி ஊர்வலகங்கள் மற்றும் குருபூஜைகளுக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவுக்கு இம்மாதம் 23-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்தியன் மக்கள் மன்றத்தின் தலைவர் வராகி தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சாதிய ஊர்வலங்களும், சாதி தொடர்பாக தலைவர்களின் குருபூஜைகளும் அதிகரித்து விட்டன. நாட்டுக்காக உழைத்த தேசிய தலைவர்களும், சாதிய வட்டத்துக்குள் சுருக்கப்பட்டுள்ளனர். இது போன்ற சாதிய ஊர்வலகங்கள் மற்றும் குருபூஜைகளின் போது கலவரங்கள் ஏற்பட்டு பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்படுகின்றன.

இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களின் கடமைகள் தடுக்கப்பட்டன. இதனால் பெரும்பான்மையான சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுகின்றனர். உத்தரபிரதேசத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அம்மாநில ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டிலும் சாதி தலைவர்களின் குருபூஜைகள், சாதி ஊர்வலங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி சத்யநாராயணன் ஆகியோர் இது பற்றி இம்மாதம் 23-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்