முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொத்து குவிப்பு: முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

திருவண்ணாமலை, செப்.11:  அளவுக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முன்னாள் திமுக அமை ச்சர் எ.வ.வேலு தனது மனைவியுடன் திருவண் ணாமலை கோர்ட்டில் ஆஜரானார்.

கடந்த திமுக ஆட் சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு. திருவண் ணாமலை மாவட்ட திமுக செயலாளராக உள்ள இவர், தற்போது திருவண் ணாமலை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரு கிறார். திருவண் ணாமலை யில் அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் பொறியி யல் கல்லூ ரி, அருணை காலேஜ் ஆப் இன்ஜினி யரிங் உள்பட பல கல்வி நிறுவனங்கள் இவருக்கும் இவரது குடும்பத்தாருக்கும் சொந்தமாக உள்ளன.

இந்நிலையில் எ.வ.வேலு மற்றும் அவரது மனைவி ஜீவா வேலு மீது ஊழல் தடுப்பு சட்டம் 1988ன்படி வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதை யடுத்து அவரது கல்லூரி, வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தி சில முக்கிய ஆவண ங்களை கைப்பற்றி னர். அவர் அமைச்சராக பதவி வகித்த 2006 முதல் 2010 வரை வருமான த்துக்கு அதிகமாக ரூ. 26 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்கள் சேர்த்திருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவ ந்துள்ளது.

இந்த வழக்கில் திருவ ண் ணாமலை தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில நேற்று காலை எ.வ.வேலு, அவரது மனைவி ஜீவா வேலு ஆகியோர் நீதிபதி ஆர்.குரூமூர்த்தி முன்பு ஆஜரானார்கள். மீண்டும் இந்த வழக்கை 08.10.2013க்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago