முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்துறை அமைச்சர்கள் மாநாடு: விஸ்வநாதன் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.11 - டில்லியில் நடைபெற்ற மின்துறை அமை ச்சர்கள் மாநாட்டில் தமிழக மின்திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்காமல் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டி உள்ளார். மாநில மின்சாரத் துறை அமைச்சர்களின் மாநாடு டெல்லியில் நேற்றுறு காலை நடந்தது. இதில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர்  நத்தம் விஸ்வநாதன் பங்கேற்று உரையாற்றினார். தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்ற முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டு வரும் திட்டங்களை அவர் பட்டியலிட்டுக் காட்டினார். தமிழ்நாட்டின் மின்சார திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாமல், மத்திய அரசு அலட்சியத்துடன் நடந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார். 

மேலும் இந்த தமிழக மின் திட்டங்களுக்கு கோரும் நிதிஉதவியை வழங்காமல் மவுனம் சாதித்து வரும் மத்திய அரசின் போக்குக்கும் அவர் கண்டனம் தெரிவித்தார். டெல்லியில் மின்சாரத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:-'பல்வேறு மாநிலங்கள்- யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மின்சாரத் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றிருக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாட்டின் மின்சக்தி சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவாக பேசுவதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கித் தந்திருக்கும் முதல்வர் புரட்சித் தலைவிக்கு என் இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

2011-ம் ஆண்டு மே மாதம் முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்றார். அப்போது முந்தைய அரசின் (திமுக) தவறான நிர்வாகம் காரணமாக பெருமளவுக்கு மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு இருந்தது. 

மின் பற்றாக்குறையைப் போக்க உறுதியான, அதிரடி நடவடிக்கைகளை எடுக்க, கிடைக்கும் மின்சார அளவை உயர்த்த மின்சாரத்தை கூடுதலாக வாங்க தீவிர முயற்சிகளில் 2 ஆண்டுகளில் இறங்கினார். அண்ணா தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றபோது மாநிலத்தின் மின்சார உபயோகம் கடுமையான தட்டுப்பாட் டில் இருந்தது. அதே நேரம் மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியிலும் இருந்தது.

ரூ.19,155 கோடி ஒதுக்கீடு 'டான்ஜெட்கோ' எனப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோகக் கழகத்துக்கு முதலமைச்சர் ரூ.19 ஆயிரத்து 155 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்தார். அரசிடமிருந்து நிதி உதவி பெறப்பட்டிருப்பதில் இதுவே மிக உயர்ந்த பட்ச அளவாகும். தமிழ்நாடு அரசின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் அதிரடி நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டில் புதிய அனல் மின் நிலையங்கள் இயக்கி வைக்கும் நிலைக்கு வந்துள்ளன. 600 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் நிலைய திட்டம், நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தித்திறன் அளவை ஏற்கனவே எட்டி இருக்கிறது. இந்த மின் திட்டம் இந்த மாதம் இறுதியில் இயக்கி வைக்கப் படும். வடசென்னை அனல் மின் நிலைய திட்டத்தின் 2 பிரிவுகளும் (ஒவ்வொன்றும் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டது) விரைவில் இயக்கப்பட உள்ளது.

சென்னைக்கு அருகில் வல்லூரில் தேசிய மின் சக்தி நிலையத்தோடு இணைந்து கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள எங்களது 2 மின் திட்டங்களும் (ஒவ்வொன்றும் 500 மெகா வாட் மின் உற்பத்தி திறனுடன்) ஏற்கனவே இயக்கி வைக்கப்பட்டு உள்ளன. 5 சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையம் தமிழக முதல்வரின் அறிவுரைக் கிணங்க ஒவ்வொன்றும் 660 மெகா வாட் மின் உற்பத்தித் திறனுடன் மொத்தம் 7300 மெகாவாட் மின் உற்பத்தித்திறனுக்கான 5 சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையங்களுக்கான டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. தவிர, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உப்பூர் என்னுமிடத்தில் ஒவ்வொன்றும் 800 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடன் 1600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையத்தையும் டான்ஜெட்கோ நிறுவனம் உருவாக்கி வருகிறது. தவிர 2013 ஜூன் மாதத்திலிருந்து நடுத்தர கால மின்சாரம் கொள்முதல் திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளுக்கு 500 மெகாவாட் மின்சாரத்தை டான்ஜெட்கோ நிறுவனம் கொள்முதல் செய்கிறது. மேலும் 2014-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதியிலிருந்து 1208 மெகாவாட் மின்சாரத்தை 15 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்வதற்கென டான் ஜெட்கோ நிறுவனம் வெற்றிகரமாக நீண்ட கால மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தங்களிலும் கையெழுத் திட்டுள்ளது. தவிர, தமிழ்நாடு மின்சாரம் ஒழுங்கு முறை கமிஷனின் அங்கீகாரத்தோடு 2122 மெகாவாட் மின்சாரத்தை 15 ஆண்டு காலத்துக்கு கொள்முதல் செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தங்களை செய்து கொள்ளவும் டான்ஜெட்கோ நிறுவனம் உத்தேசித்துள்ளது. இத்தகைய முக்கிய நடவடிக்கைகள் காரணமாக, தமிழ்நாட்டில் தற்போதுள்ள மின்சாரப் பற்றாக்குறை அடியோடு களையப்படும்; மேலும் 12-வது திட்ட காலத்துக்கான எதிர்காலத் தேவைக்கு மின் உற்பத்தியில் நல்ல வளர்ச்சி காணப்படும் என்று உறுதியாக நம்புகிறோம். காற்றாலை மின்சாரத்தில் முன்னணி 7000 மெகாவாட்டுக்கும் மேலான உற்பத்தித் திறனுடன் காற்றாலை மின்சாரம் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில், வழிகாட்டியாக இருந்து வருகிறது. 3 ஆண்டுகளில் 3000 மெகா வாட் என்ற மகத்தான இலக்குடன் மாநிலத்துக்கான சூரிய சக்தி கொள்கை 2012-ஐ முதல்வர் வெளியிட்டிருக்கிறார். இதன்படி, நாட்டில் முதல்முறையாக 1000 மெகா வாட் உற்பத்தித் திறனுக்காக சூரிய சக்தி திட்டத்தை அமைக்குமாறு டான்ஜெட்கோ நிறுவனம் கோரப்பட்டு உள்ளது. 

698 மெகாவாட் உற்பத்தித் திறனுக்காக சூரிய சக்தி நிலையம் அமைக்க 'சோலார் டெவ்லப்பர்ஸ்' நிறுவனத்துக்கு இசைவுக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு வழங்கும் நிதி ஊக்கச் சலுகை மான்யத்துக்கு அதிகமாக, கூரைகளில் சூரிய சக்தி சாதனங்களை பொருத்துவதை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு கூடுதல் மான்யம் அளித்து வருகிறது. 

காற்றாலை மின் சக்தியை பெருமளவுக்கு கொள்முதல் செய்யும் நிறுவனம் டான்ஜெட்கோ. இதற்கு முதலீடு பெருமளவு என்றாலும் காற்றாலை மின் சக்தியை கொண்டு செல்வதற்கு ரூ.3774 கோடி செலவில் தேவையான கட்டமைப்பு வசதியை உருவாக்கி வருகிறது. காற்றாலை மின் சக்தியைக் கொண்டு செல்வதற்கு அவசியமான கட்டமைப்பு வசதியை உருவாக்கி தருவதற்காக நிதி உதவி அளிக்குமாறு நாங்கள் வைத்திருக்கும் கோரிக்கையை உடனடியாக மத்திய அரசு ஏற்காமல் இருப்பது- எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தேசிய தூய்மை எரிசக்தி நிதியிலிருந்து ( 'நேஷனல் க்ளீன் எனர்ஜி பண்ட்' அமைப்பிலிருந்து) நிதி உதவி அளிக்குமாறு எங்களின் கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்க வில்லை.மரபு சார் மின்சக்தியோடு ஒப்பிட்டுப் பார்க்கையில்  காற்றாலை மின் சக்தி அல்லது சூரிய மின்சக்தியைக் கொண்டு செல்ல யூனிட் ஒன்றுக்கு கட்டணம் 4 லிருந்து 5 மடங்கு அதிகம்.  ஆகவே மத்திய அரசு தனது நிலையை மறுபரிசீலனை செய்து நேஷனல் க்ளீன் எனர்ஜி பண்ட் நிறுவனத்திடமிருந்து தேவையான உதவியைப் பெற வழி வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களும் நீண்ட காலத்துக்கு முன்னதாகவே மின் மயமாக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி,  வனப்பகுதிகளில் 98 குடியிருப்புகளுக்கு மட்டுமே மின்சாரம் வழங்கப்பட வேண்டும். இவற்றுக்கு சூரியசக்தி மூலம் மின்சாரம் வழங்க அரசு திட்டமிட்டு உள்ளது. வீடுகள் அனைத்துக்கும் மின்சார வசதி அளிக்க வேண்டும் என்று திட்டமிட்டு அரசு செயலில் மும்முரமாக   இறங்கி உள்ளது.

இவ்வாறு  அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.

அமைச்சருடன் தமிழக உயலர் அதிகாரிகளும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago