முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்டோக்களுக்கு மீட்டரை திருத்தம் செய்ய அவகாசம்

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 12 - சென்னையில் மாற்றி அமைக்கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு புதிய கட்டண விகிதத்தை நிர்ணயித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 25-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதன்படி முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கான ஆட்டோ கட்டணம் 25 ரூபாய். அதன்பிறகு கூடுதல் கிலோ மீட்டருக்கு கட்டணம் 12 ரூபாய் ஆகும்.

இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்டோ ரிக்ஷாக்களில் பயணம் செய்தால் கூடுதலாக 50 சதவீதம் இரவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் காத்திருப்பு கட்டணம் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கு 3 ரூபாய் 50 காசு வீதம் 1 மணி நேரத்துக்கு 42 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

திருத்திய கட்டணம் கடந்த 25-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த புதிய கட்டண விவரம், பத்திரிகை மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டன.

போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்து ஆணையர் பிரபாகர்ராவ் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகள் சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம் அமைத்து ஆட்டோ டிரைவர்களுக்கு திருத்தப்பட்ட ஆட்டோ கட்டண அட்டையை லேமினேஷன் செய்து நேரில் வழங்கினார்கள்.

மொத்தம் உள்ள 71,470 ஆட்டோக்களில் நேற்றுவரை 40 ஆயிரம் ஆட்டோக்களுக்கு திருத்தி அமைக்கப்பட்ட புதிய அட்டை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 31 ஆயிரம் பேர் வாங்காமல் உள்ளனர்.

புதிய கட்டண அட்டையை வருகிற 15-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் அல்லது சிறப்பு முகாம் மையத்திற்கு சென்று ஆட்டோ டிரைவர்கள் அல்லது உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றி அமைக்கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

திருத்தி அமைக்கப்பட்ட ஆட்டோ கட்டண தொகையை தான் டிரைவர்கள் கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டாலும் இன்னும் சென்னையில் இது முழுமையாக அமுலாகவில்லை.

பயணிகளிடம் ஆட்டோ டிரைவர்கள் பேரம் பேசி குத்து மதிப்பாக கட்டணம் வாங்கும் முறைதான் இன்னும் பல பகுதிகளில் நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்