முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்கள் நிலை குறித்து பதிலளிக்க உத்தரவு

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை.செப்.12 - இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பதில் அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. தமிழக மீனவர்கள் பாதுகாப்பு நலச் சங்கம் செயலாளர் பிட்டர் ராய்யப்பன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் தமிழக எல்லையை தாண்டி மீன் பிடிக்கிறார்கள் என்ற கோணத்தில் இலங்கை அரசு அப்பாவி மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதுவரை சுமார் 378 தமிழக மீனவர்ககளை கொன்று குவித்துள்ளது இலங்கை ராணுவம். மேலும் கடந்த ஜூன் மாதத்தில் கூட 57 தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கொண்டு சென்று சிறையில் அடைத்துள்ளது. இது குறத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தங்களது வேதனையை தெரிவித்து பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவ்வாறு கடிதம் எழுதிய பிறகும் பாராளுமன்றத்திலே வெளியுறவு துறை அமைச்சர் பேசும்போது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்லது என்று தெரிவித்திருந்தார். 1947ஆம் ஆண்டு இந்திய அரசிடம் இருந்த கச்சத்தீவை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு மத்திய அரசு வழங்கியது.

அந்த ஒப்பந்தத்தல் கச்சதீவு பகுதி இலங்கை மற்றும் தமிழக மீணவர்களுக்கு சம உரிமை உள்ளது. மேலும் தமிழக மீனவர்கள் தங்களது வலைகளை காயவைய்பதற்க்கும். இலைப்பார மற்றம் உணவு உன்ன போன்ற செயல்பாட்டிற்கும் இரு நாட்டு மீனவர்களும் பகிர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்பந்த தடையை உணராமல் இலங்கை ராணுவம் தனது வெறித்தனத்தை காட்டி வருகிறது. ஆகையால் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்  உண்மை நிலை என்ன என்பதை குறித்து மத்திய அரசு தனது நிலையை தமிழக மக்களுக்கு தெரிவிக்கவேண்டும். மேலும் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை எந்த நிபந்தனையும் இன்றி உடனே விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறபிக்க வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால் மற்றும் நீதிபதி சுப்பையா முன்பு விசாரணை வந்தபோது தமிழக மீனவர்கள் நிலை குறித்தும், கச்சதீவு ஒப்பந்ததின் தன்மை குறித்து 4 வாரத்திற்குள் மத்திய அரசை பதலிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 9.10.13 யன்று ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்