முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 கமிஷனர்களுக்கு நீதிபதியாக செயல்படும் அதிகாரம்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.16 - சென்னையில் உள்ள 12 துணை கமிஷனர்களுக்கு, செயலாக்க நீதிபதி அதிகாரத்தை வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. குற்றச்செயலில் ்படுவோர் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் தொடர்ந்து ்டுபடுவோரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். அப்போது, அந்த நபர்கள் தொடர்ந்து குற்றச்செயலில் ்டுபடுவார் என்ற சந்தேகம் ஏற்படும்போது, அந்த நபரை குற்றச்செயலில் ்டுபடாமல் தடுப்பதற்காக, குற்றவியல் விசாரணை முறை சட்டத்தின் (சி.ஆர்.பி.சி.) கீழ் நடவடிக்கை எடுப்பார்கள்.

குற்றவியல் விசாரணை முறை சட்டம் 107 (அமைதியை பாதுகாத்தல்), 108 (அரசுக்கு எதிராக அவதூறு செய்தியை பரப்புவோரிடையில் நல்லொழுக்கத்தை பாதுகாத்தல்), 109 (சந்தேகப்படும்படியான நபர்களிடம் நல்லொழுக்கத்தை ஏற்படுத்தி பாதுகாத்தல்), 110 (தொடர்ந்து குற்றச்செயல்களில் ்டுபடுவோரிடையே நல்லொழுக்கத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்.

இதன்பின்னர், அந்த நபர்கள் செயலாக்க நீதிபதி அதிகாரம் கொண்ட தாசில்தார் முன்பு ஆஜர்படுத்தப்படுவார். அவர்களை, தாசில்தார் எச்சரிகை செய்து அனுப்பி வைக்கப்படுவார். இதன்பின்னர், 6 மாதங்களுக்கு அந்த நபர்கள் எந்த குற்றச்செயல்களிலும் ்டுபடக்கூடாது. ஒருவேளை அவர்கள் குற்றச்செயல்களில் ்டுபட்டால், அவர்களை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தாமலேயே நேரடியாக ஜெயிலில் அடைக்க முடியும். இப்படி ஜெயிலில் அடைக்கப்படுபவர்களுக்கு 6 மாதங்களுக்கு ஜாமீன் கிடைக்காது.

இந்த நிலையில், தாசில்தாருக்கு உள்ள செயலாக்க நீதிபதி அதிகாரத்தை சென்னையில் உள்ள துணை கமிஷனர்களுக்கு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டசபையில் 23-4-2013 அன்று பேசிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 'சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் உள்ள துணை கமிஷனர்களுக்கு செயலாக்க நீதிபதியாக செயல்படும் அதிகாரங்கள் வழங்கப்படும்' என்று கூறினார்.

இதனடிப்படையில், சென்னையில் உள்ள மைலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, அம்பத்தூர், புளியந்தோப்பு, அண்ணாநகர், பரங்கிமலை, தியாகராயநகர், அடையாறு, மாதவரம், பூக்கடை, வண்ணாரப்பேட்டை ஆகிய 12 காவல் மாவட்டங்களில் பணியாற்றும் துணை கமிஷனர்களுக்கு செயலாக்க நீதிபதியாக செயல்படும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்