முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அமைச்சர் பெரியசாமி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப். 16 - தி.மு.க முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி, முன்னாள் போலீஸ் உயரதிகாரி ஜாபர்சேட் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு குடிசை வாரிய நில ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் இந்த உத்ரரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது தமிழக காவல் துறையில் உளவுப் பிரிவில் தலைமை பொறுப்பில் ஜாபர்சேட் இருந்தார். இவர் பதவியில் இருந்த போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியகாக புகார்கள் எழுந்தன. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மண்டபம் அதகிதள் முகாமை கவனிக்கும் கடுதல் டி.ஜி.பி.யாக ஜாபர்சேட் நியமிக்கப்பட்டார். 

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு துறையில் சிறப்பு உதவியாளராக இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சங்கர், தமிழக தலைமை செயலரிடம் ஒரு புகார் அளித்தார். அதில் கூடுதல் டி.ஜி.பி ஜாபர்சேட் உண்மைகளை மறைத்து வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டை பெற்று பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜாபர்சேட் உட்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். புகாரின் அடிப்படையில் அவரை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்தது. இந்த நிலையில் ஊழல் வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனர் 750 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தார். 

அதில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி. ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீண், குடிசை வாரிய செயற்பொறியாளர் முருகையன், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலர் ராஜமாணிக்கம், அவரது மகன் சங்கர், முன்னாள் அமைச்சர் பெரியசாமி மற்றும் லேண்ட்மார்க் கட்டிட நிறுவனத்தை சேர்ந்த உதயகுமார் ஆகிய 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த கூட்டு சதியில் ஈடுபடுதல், குற்ற சதிக்கு சாதகமாக இருத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் ஜாபர்சேட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 29 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக பெரியசாமி, ஜாபர்சேட் உட்பட 7 பேருக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்