முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2014 தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்: முதல்வர்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.17 - நடைபெறும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் - 2014-ன் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா நியமனம் செய்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் பணிகளை முழுமையாக ஆற்றுவதற்கு ஏதுவாக, கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.  

சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும்.

என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் அனைவரும் தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ்டுபடுத்திக் கொண்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மகத்தான வெற்றியை ்ட்டித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.    

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்