முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்டோக்களுக்கு புதிய மீட்டர் பொருத்த காலக்கெடு நீடிப்பு

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.17-சென்னையில் ஆட்டோக்களுக்கு புதிய மீட்டர் பொருத்த அக்டோபர் 15 காலக்கெடு நீடிப்பு தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைத்து கடந்த ஆகஸ்டு 25-ந் தேதி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து, திருத்திய கட்டணம் உள்பட பல்வேறு விவரங்களை கொண்ட அட்டை அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்பட்டது. 

இந்த அட்டையை ஆட்டோவில் பயணம் செய்பவர்களுக்கு தெரியும் விதமாக ஓட்டுனர் இருக்கைக்கு பின்புறம் ஒட்டி வைக்கவேண்டும். இந்த நடைமுறை இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதனால், புதிய கட்டண அட்டை வழங்கும் பணி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நேற்று இரவு வரை நடந்தது. 

சென்னையிலுள்ள 72 ஆயிரம் ஆட்டோக்களில், இதுவரை 52 ஆயிரம் ஆட்டோ உரிமையாளர்கள் மட்டுமே இந்த அட்டையை பெற்றுள்ளனர். எனவே மீதமுள்ள 20 ஆயிரம் ஆட்டோ உரிமையாளர்கள் மீது இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்காக போக்குவரத்து அதிகாரிகள் 40 பேர் தனித்தனி குழுக்களாக இன்று சென்னை முழுவதும் தீவிர கண்காணிப்பில் ்டுபட உள்ளனர். 

இதற்கிடையில் திருத்திய புதிய கட்டண மீட்டர்களை அக்டோபர் 15-ந் தேதிக்குள் ஆட்டோக்களில் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு கால நிர்ணயம் செய்துள்ளது. இதனால், சென்னை புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை உள்பட பல இடங்களில் மீட்டர் பழுதுபார்க்கும் கடைகளில் ஆட்டோ டிரைவர்களின் கூட்டம் அலைமோதுகிறது. 

தங்கள் ஆட்டோக்களில் உள்ள பழைய மீட்டர்களில், புதிய கட்டணத்தை பதிவு செய்யும் பணியில் டிரைவர்கள் ்டுபட்டுள்ளனர். இதுகுறித்து, சிந்தாதிரிப்பேட்டை ஆட்டோ மீட்டர் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடை நடத்தும் ஏ.சையது அக்ரம் கூறியதாவது:- 

பழைய மீட்டரில், புதிய கட்டணம் பதிவு செய்துள்ள சிறு கருவியை, புனேவில் இருந்து வாங்கி வந்து பொருத்தி கொடுக்கிறோம். இதற்காக தினமும் 200 மீட்டர்கள் வேலைக்கு வருகிறது. நாங்கள் 20 பேர் வேலை செய்தும், அவர்களது மீட்டரில் புதிய கருவியை உடனுக்குடன் பொருத்திக் கொடுக்க முடியவில்லை. 

சென்னையில் தயாரிக்கப்படும் புதிய டிஜிட்டல் மீட்டர்கள் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மீட்டரை பிரிண்டரில் இணைத்து விட்டால், கட்டணத்துக்குரிய ரசீதை பயணிகளிடம் கொடுக்க முடியும். 

இவ்வாறு அவர் கூறினார். 

ஆட்டோ மீட்டரில் புதிய கட்டணத்தை மாற்றி அமைக்கும் பணிக்கான காலஅவகாசத்தை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும் என்று ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து புதிய கட்டண அட்டை மிகப்பெரிய போராட்டத்துக்கு பின் தான் வாங்கினோம். எனவே மீட்டர் பொருத்த கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று புருஷோத் என்ற ஆட்டோ டிரைவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்