முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்.,க்கு எதிர்க்கட்சியும் - எதிரிக் கட்சியும் இல்லை

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

ஆரணி, செப். 17 - காங்கிரசுக்கு எதிர்க்கட்சியும் இல்லை, எதிரிக் கட்சியும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஆரணி காங்கிரஸ் பிரமுகர் பி.கே.ஜி.பாபு இல்ல திருமண விழா சேவூரில் நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது, 

காங்கிரசுக்கு எதிர்க் கட்சியும் இல்லை. எதிரி கட்சியும் இல்லை. அனைத்து கட்சிகளும் காங்கிரசுக்கு நண்பர்கள் உண்டு. திருமண விழா என்பது வேறு கட்சி என்பது வேறு. இத்திருமண விழாவில் அனைத்து கட்சி நண்பர்களையும் பார்த்த திருப்தி உள்ளது என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்