முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது: வைகோ

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

விருதுநகர், செப். 17 - இனப் படுகொலை நடக்கும் போது காங்கிரஸ் கூட்டணியுடன் இருந்த தி.மு.க. அதை கண்டுகொள்ளாமல் இருந்தது. அதனால் வரும் மக்களவை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

விருதுநகர் சூலக்கரையில் ம.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மேலும் பேசியதாவது, 

மக்களவை தேர்தலில் மாற்றம் வேண்டும். ஊழல் மற்றும் இனப் படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் அரசை தூக்கியெறிய பொதுமக்கள் தயாராக வேண்டும். தொண்டர்களின் எண்ணப்படியே மக்களவை தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடும் என்பதால் தொண்டர்கள் அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும். இதில் முதல் கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களை சேர்க்க வேண்டும். யாரோடு கூட்டணி என்பது எனக்கும், எனது கட்சி தொண்டர்களுக்கும் மறைமுகமாக தெரியும். சரியான நேரம் வரும் போது அறிவிப்பை வெளியிடுவேன். 

ஊழல் மற்றும் இனப் படுகொலைக்கு காரணமாக இருந்த காங்கிரஸ் அரசு அல்லாத மாற்று அரசு உருவாக வேண்டும். இந்த மாற்று அரசு அமைப்பதற்காக ம.தி.மு.க.வினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். தமிழகத்தில் பொதுமக்களின் பிரச்சினைக்காக தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறோம். அதனால் பொதுமக்களின் கவனம் முழுவதும் ம.தி.மு.க.வின் பக்கம் திரும்பியுள்ளது. உங்களுக்காக குரல் கொடுப்பதற்கு டெல்லிக்கு அனுப்பி வையுங்கள். அதே போல் இலங்கையில் தனி ஈழம் அமைப்பதற்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago