முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவை மீட்க வேண்டும்: ம.தி.மு.க. தீர்மானம்

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

விருதுநகர், செப். 17 - இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் ம.தி.மு.க. மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. 

விருதுநகர் சூலக்கரையில் ம.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு நடைபெற்றது. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மக்களவை தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுவது அதற்கு முன்னதாக தொடர்ந்து ஊழல் புகாரில் சிக்கி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அகற்ற வியூகம் வகுத்து செயல்பட வேண்டும். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த கூடாது. சிங்கள மீனவர்களால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் உடனடியாக இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்கு முறை குழு ஆகிய அமைப்புகளை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்