முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் துவங்கியது

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, செப். 16- இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை இம்மாதம் 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை தமிழக அரசுடன் இணைந்து பிலிம்சேம்பர்  நடத்துகிறது.இதையொட்டி தமிழ் - தெலுங்கு கன்னடம்-மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பிரபலமான சூப்பர்ஹிட் படங்களை பொது மக்களுக்கு இலவசமாக திரையிட்டுக் காட்டுவதென பிலிம்சேம்பர் முடிவெடுத்தது.

இந்நிலையில் சென்னை சத்தியம் திரையரங்கில் இந்தப்படங்களின் திரையீடு துவக்க விழா நேற்று கோலாகலமாக நடந்தது.

எஸ்.பி.ஐ. சினிமா நிறுவனத்தின் படங்கள் வெளியிட்டு உறவுகள் பிரிவின் துணைத் தலைவர் முனிக் கன்னையா வோடு  பிலிம்சேம்பர் நிர்வாகிகள் சி.கல்யாண் (தலைவர்) கே.எஸ்.ராமாராவ், எல்.சுரேஷ், ரவி கொட்டாக்காரா (அமைப்பாளர்கள்) ஆகியோர் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அதன்படி இன்று காலை 11.30 மணிக்கு எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்திருக்கும் 'ஆயிரத்தில் ஒருவன்' படம் இலவசமாக திரையிடப்பட்டு, நூற்றாண்டு விழா கலை கட்டத்துவங்கியது.

விழாவில் தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கேயார், திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பன்னீர் செல்வம், பிலிம்சேம்பர் நிர்வாகிகள் கல்யாண் கே.எஸ்.ராமாராவ், எல்.சுரேஷ், ரவி கொட்டாக்காரா கே.முனி கன்னையா, உள்ளிட்ட பலரும் பங்கேற்றார்கள். இன்று முதல் 24-ந் தேதி வரை பொது மக்களுக்கு சூப்பர் ஹிட் பழைய படங்கள் சத்யம் தியேட்டரில் திரையிடப்படுகிறது. 

செம்மீன் திரையீடு 17-ந் தேதி காலை 11.30 மணிக்கு சிவாஜி - தேவிகா நடித்த 'கர்ணன்', -திரையீடு 18-ந் தேதி காலை 11.30 மணிக்கு எம்.ஜி.ஆர்., மஞ்சுளா நடித்த 'ரிக்ஷாக்காரன்', திரையீடு 19-ந் தேதி காலை 11.30 மணிக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த 'அடிமைப்பெண்', திரையீடு 20-ந் தேதி காலை 11.30 மணிக்கு என்.டி.ஆர்., நாகேசுவரராவ், சாவித்திரி நடித்த மாயா பஜார் (தெலுங்கு), திரையீடு 21-ந் தேதி காலை 11.30 மணிக்கு ராஜ்குமார் நடித்த 'பங்காரத மனுஷ்யா' (கன்னடம்), திரையீடு 22-ந் தேதி காலை 11.30 மணிக்கு சத்யன், மது, ஷீலா நடித்த, 'செம்மீன்', திரையீடு 23-ந் தேதி காலை 11.30 மணிக்கு 'ஒலியும் திரவும்'  (மலையாளம்). திரையீடு24-ந் தேதி காலை 11.30 மணிக்கு தர்ஷன் - ஜெயபிரதா நடித்த, 'சங்கொலி ராயனா' (கன்னடம்) ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. படம் பார்க்க கட்டணம் கிடையாது. அனுமதி இலவசம்.

அந்தக்கால பிரபலங்களின் சூப்பர்ஹிட் படங்களை பார்ப்பதற்கு ஒரு அருமையான சந்தர்ப்பத்தை உருவாக்கித் தரவே இந்த ஏற்பாடு என்று பிலிம்சேம்பர் தலைவர் சி.கல்யாணும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயாரும் தெரிவித்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்