முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்லீக் தகுதி சுற்று இன்று துவக்கம்

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மொகாலி, செப். 17 - சாம்பியன்லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி 2009 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நியூ சவுத்வேல்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 2010 ம் ஆண்டில் நடந்த 2 வது சாம்பியன் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 2011 ல் மும்பை இந்தியன் அணியும், 2012 ல் சிட்னி சிக்ஸர்சும் வெற்றி பெற்றன. 5 வது சாம்பியன் லீக் போட்டி வருகிற 21 ம் தேதி முதல் அக்டோபர் 6 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

ஐ.பி.எல். போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பிரீஸ்பேர்ன்கீட், பெர்த்கோர்ஸ்செர்ஸ்(ஆஸ்திரேலியா), லயன்ஸ், டைட்டனஸ்(தென்னாப்பிரிக்கா), டொபாக்கோ(வெஸ்ட் இன்டீஸ்)ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. தகுதி சுற்றில் இருந்து 2 அணிகள் வீதம் 10 அணிகள் விளையாடுகின்றன. ஜெயப்பூர், ராஞ்சி, மொகாலி, அகமதாபாத், டெல்லி ஆகிய இடங்களில் இந்த போட்டி நடக்கிறது. இந்த போட்டியின் தகுதி சுற்று மொகாலியில் இன்று நடைபெறவுள்ளது. 

இதில் ஐ.பி.எல்.லில் 4 வது இடத்தை பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத், ஒட்டகோகெட்ஸ்(நியூசிலாந்து), பைசலாபாத் வால்வ்ஸ்(பாகிஸ்தான்), கந்துரா(இலங்கை) ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு அணியுடன் மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் முதன்மை சுற்றுக்கு தகுதி பெறும். தகுதிச் சுற்றில் தினசரி 2 ஆட்டம் நடைபெறுகிறது. இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மிஸ்வாஉல்ஹக் தலைமையிலான பைசலாபாத் - டெரிக்போர்டர் தலைமையிலான ஓட்டாகோ அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு நடைபெறும் 2 வது ஆட்டத்தில் சிகார்தவான் தலைமையிலான சன்ரைசர்ஸ்(ஐதராபாத்)- திரிமானே தலைமையிலான கண்டூரா மரூன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்