முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 பொதுக் கூட்டங்களில் நரேந்திர மோடி பேசுகிறார்

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,செப். 20 - அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 மாதமே உள்ளதால் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் ஆளும் காங்கிரஸ் கூட்டணி மீது அதிருப்தி நிலவுகிறது. நாடெங்கும் காங்கிரசுக்கு எதிரான அலை வீசுவதாக கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள பா.ஜ.க. தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் குஜராத் முதல்வர் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து முன்னிறுத்தி உள்ளனர். 

நரேந்திர மோடி மூலம் அதிக இடங்களை பிடித்து விடலாம் என்று பா.ஜ.க கருதுகிறது. அதற்காக இந்தியா முழுவதும் நரேந்திர மோடி திட்டமிட்டு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். பா.ஜ.க சார்பில் 540 பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு பிரம்மாண்ட கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் தேசிய தலைவர்கள் கலந்து கொண்டு பேசுவார்கள். 

இந்த 540 கூட்டங்களில் 100 பொதுக் கூட்டங்களில் மோடி பேசவுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் அவர் அதிக நகரங்களில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வரும் 26 ம் தேதி பா.ஜ.க. சார்பில் திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மோடி பேசுகிறார். இந்த கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து மோடியின் பேச்சை கேட்க வசதி செய்யப்பட்டுள்ளது. மோடி சென்னையிலும் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் புதுமையான ஆதரவு திரட்டும் திட்டத்தை மோடி வைத்துள்ளார். அதன்படி முக்கிய நகரங்களில் ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரபலங்களை அழைத்து அவர்களிடம் மோடி உரையாடவுள்ளார். இதில் பங்கேற்குமாறு தொழிலதிபர்கள், ஓய்வு பெற்ற அரசு உயரதிகாரிகள், புகழ் பெற்ற டாக்டர்கள், வக்கீல்கள், திரையுலக பிரமுகர்கள், விஞ்ஞானிகள், தகவல்தொடர்பு நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட பலருக்கு அழைப்பு அனுப்பப்படவுள்ளது. அவர்களிடம் மோடி விவாதிப்பார்.

கடந்த மாதம் ஐதராபாத்தில் பிரபலங்களை சந்தித்து மோடி சுமார் அரை மணி நேரம் பேசினார். அது நல்ல பலனை தந்ததால் சென்னை, பெங்களூர் உட்பட சில நகரங்களில் பிரபலங்களை மோடி சந்தித்து பேசுவார். இதன் மூலம் நாட்டில் நடைபெற வேண்டிய வளர்ச்சி பணிகள், திட்டங்கள் தொடர்பான ஆக்கபூர்வமான சிந்தனை கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. 

இதையடுத்து அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்களும் பல்வேறு நகரங்களில் பிரபலங்களை சந்தித்து பேசுவார்கள் என்று வெங்கையா நாயுடு கூறினார். எல்லா பாராளுமன்ற தொகுதிகளுக்கும் பா.ஜ.க. சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை களத்தில் இறக்கி ஒருங்கிணைந்து செயலாற்றும் படி வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆலோசனைப்படி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அடிமட்ட நிர்வாகிகள் ஆலோசனைப்படி பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஆய்வு செய்து இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவர். அக்டோபர் மாத இறுதியில் பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago